ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

செயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்!
வெள்ளி 15 ஜூலை 2016 11:25:44

img

ஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சளைக்காத ஒன்று. அண்மையில் 3டி பிரின்டிங் முறையில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றையும், சிறிய வகை விமானம் ஒன்றையும் உருவாக்கி சாதனை செய்தது. தற்போது ‘ஸெஃபைர் டி’ (Zephyr T) எனும் சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன் விமானம் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி அறிவியல் வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் சோலார் ட்ரோன்கள் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும். குறிப்பிடத்தக்க விஷயம், ‘மிகக் குறைவான செலவில் செய்யும்’ என்பதுதான். இதனை இந்த நிறுவனத்தினர் ‘போலி செயற்கைக்கோள்கள்’ என்று அழைக்கின்றனர். இதனை செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிக காலம் செயல்பட வைக்க முடியும். தொழில்நுட்ப மேம்பாடு, பேட்டரி உள்பட சில சிக்கல்களுக்கு இதனைத் திரும்ப பூமிக்கு வரவழைத்து, பழுது பார்த்து, மீண்டும் அனுப்பவும் முடியும் என்பது கூடுதல் பிளஸ் பாயின்ட்டுகளாக உள்ளன. 2008ம் ஆண்டே ஏர்பஸ் நிறுவனம் இதற்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கி விட்டது. 2010ம் ஆண்டு ‘ஸெஃபைர் 7’ எனும் ட்ரோனை 14 நாட்கள் இடைநிறுத்தாமல் எரிபொருள் நிரப்பாமல் வானில் சுற்றிவரச் செய்தது உலக சாதனையாக பதிவாகியுள்ளது. இந்த ட்ரோன்களை ராணுவ கண்காணிப்பு, அவசரகால தொலைத்தொடர்பு, அதிவேக இணையம் உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். விண்வெளியில் காலாவதியான செயற்கைக்கோள் கழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் அந்த ஆபத்தை பெருமளவு குறைக்கும்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img