வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

தமிழர்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு..!
சனி 20 மே 2017 18:43:46

img

இந்தித் திணிப்பு விவகாரத்தில் தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று தி.மு.க மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து கோயம்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் கனிமொழி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 'மொழி என்பது வெறும் தொடர்புக்கு மட்டுமல்ல. அது நமது வரலாறு. கலாசாரம். பண்பாடு. தமிழை தமிழர்கள் மொழியாக மட்டும் பார்ப் பதில்லை. அது எங்கள் உணர்வோடு உயிரோடு உடலோடு கலந்தது. நாங்கள் இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை. அது எங்கள் மேல் திணிக்கப் படுவதைத் தான் எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்துக்குப் போகும்போது நானும் அங்குள்ள சூழலில் இந்தி கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடுதான் போனேன். ஆனால் இந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்ற சூழலை எதிர் கொண்டபோது இனி என்ன ஆனாலும் உன் மொழியைக் கற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. 22 ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று. இதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ச்சியாக மைல் கல்லில் இந்தி, கடிதம் எழுதினால் இந்தியில் பதில், மத்திய அரசின் அறிவிப்புகள் இந்தியில், மற்றும் அரசாணைகள் இந்தியில் என தொடர்ச்சியாக இந்தியைத் திணித்து வருகிறது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள்கூட தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்து வம் அளிப்பது இல்லை. மாறாக, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கட்டாயம், கேந்த்ரிய வித்யாலயாவில் இந்தி கட்டாயம், கல்லூரிகளில் இந்தித்துறை என மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தித் திணிப்பு வேலையில் ஈடுபடுகிறது. மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி வங்காள மொழியை கட்டாயம் ஆக் கப் போகிறார்கள். ஆனால் இன்றைய தமிழக அரசு ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய அரசுக்குக் கூழைக் கும்பிடு போடுகிறது. லத்தீன் செம் மொழி பேசுவதற்கு ஆளில்லை. சமஸ்கிருதம் செம்மொழி. வழிபாட்டுக்கு மட்டுமே. பேசுவதற்கு ஆளில்லை. பழமையான ஆங்கிலம் இன்று புரியாது. நவீன ஆங்கிலம் தான் நாம் பேசுகிறோம். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சங்கத்தமிழ் இன்றும் புரியும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் பேசப்படும் மொழி தமிழ். உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது. இந்தியாவுடன் உரையாட ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம் என்று அறிஞர் அண்ணா தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அன்றைய மாணவர் போராட்டத்தால், நேரு இந்தித் திணிப்பு இனி இருக்காது என உறுதிமொழி அளித்தார். இந்தித் திணிப்பு விவ காரத்தில் தமிழக மக்களின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு' என்று எச்சரிக்கை விடுத்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img