ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

மாத சம்பளம் வெறும் வெ.2500
சனி 20 மே 2017 18:00:04

img

புத்ராஜெயா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) அண்மைய காலமாக மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் வழி ஊழல் பேர்வழிகள் பலர் சிக்கி வருவதுடன், அவர்களின் வாழ்க்கைப் பின்னணி பற்றிய விவரங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. மலாக்காவில் நடந்த ஒரு சம்பவமும் அப்படித்தான். மாதம் ஒன்றுக்கு வெறும் 2,500 வெள்ளி மட்டுமே தனது சம்பளமாகப் பெறும் போலீஸ் கார்ப்பரல் ஒருவர், போலீஸ் தலைமையக வளாகத்தில் உள்ள தனது வீட்டின், பொருட்களை சேர்த்து வைக்கும் அறையில் பொருட்களோடு 800,000 வெள்ளி ரொக்கத்தை பதுக்கி வைத்திருந்தார்.இந்த பணம் சாதார ணமாக வந்தது கிடையாது, அவரின் சம்பாத்தியத்தில் வந்ததும் கிடையாது. ஒழுங்கீன செயல்களை முறியடிக்கும் அமலாக்க அதிகாரியாக அவர் பதவி யேற்ற ஐந்து மாதங்களில் சூதாட்டம் மற்றும் உடம்பு பிடிப்பு மையங் களின் உரிமையாளர்களிட மிருந்து பறிக்கப்பட்ட பணம் அதுவாகும். மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய, பாதுகாப்புப் பணம் கோரும் ஒரு கும்பலை எம்.ஏ.சி.சி கடந்த புதன்கிழமை முறியடித் தது. எனினும், குறிப்பிட்ட இந்த போலீஸ் கார்ப்பரல், விலை மாதர்களை வைத்து தொழில் புரியும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் தரப்பினரிடமிருந்து தானே சொந்தமாகப் பணம் பறித்து வந்துள்ளார்.அந்த 52 வயது போலீஸ் அதிகாரி ஐந்தே மாதங்களில் 800,000 வெள்ளியை வசூலித் துள்ளார். ஒரு கார்ப்பரல் அந்தஸ் தில் உள்ள ஒருவர், அதிகபட்சம் சம்பளம் எடுத்தாலும் இவ்வளவு பெரிய தொகையை சேமிப்ப தற்கு 26 ஆண்டுகள் ஆகும். அவர் சொந்தமாக செயல் பட்டு வந்துள்ளார். நாங்கள் விசாரணை செய்து வரும் பாதுகாப்புப் பணம் கோரும் கும்ப லுக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்று எம்.ஏ.சி.சி வட்டாரம் கூறியது. ஐந்தே மாதங்கள் அந்த அதிகாரி எப்படி இவ்வளவு பெரிய தொகையை வசூலிக்க முடிந்தது என்பது இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. கார்ப்பரல் அந்தஸ்தில் உள்ளவர்களின் சராசரி மாதச் சம்பளம் 2,500 முதல் 3,500 வரை மட்டுமே. டி7 என்றழைக்கப்படும் ரகசி யக் கும்பல், சூதாட்டம், விலை மாதர் நடவடிக்கை பிரிவில் அவர் பணியாற்றி வந்துள்ளார். மற்ற பிரிவுகளில் சேவையாற் றிய போது அவர் எங்கெங்கு பணம் வசூலித்திருப்பார் என்பது தெரிய வில்லை என்று அவ்வட்டாரம் குறிப்பிட்டது. அந்த கார்ப்பரல், புத்ராஜெயா மாஜிஸ் திரேட் நீதிமன்றத்திற்கு கடந்த வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு, ஏழு தினங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் ஷேக் அப்துல் அட்ஜிஸ் ஷேக் அப்துல்லா, புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி சக்ரி யூசுப் ஆகியோர் உள்ளிட்ட ஒன்பது போலீஸ் அதிகாரிகள் அடங்கும் பணம் பறிக்கும் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகள் தொழில் உரிமையாளர்களிட மிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு இடைத்தரகர்களிடம் அதனை கொடுப்பார்கள். அம் மாதி ரியான நடுவர்களில் ஒருவர் தான், பல்வேறு உணவகங்களில் பணம் போட்டுள்ள 50 வயது தொழில் அதிபர். போலீசாருடன் தனக்கு நல்ல தொடர்பு இருப்பதாகவும், அந்த போலீஸ் அதிகாரிகளால் வசூலிக் கப்படும் பணம் புக்கிட் அமானில் உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுக் கப்படு வதாகவும் குறிப்பிட்ட அந்த நடுவர் கூறி வந்ததால் கூட்டரசு போலீசார் மலாக்கா போலீஸ் அதிகாரிகளை நோட்டமிடத் தொடங்கினர். அதன் விளைவு தான் இந்த கைது நடவடிக்கை. அது என்னுடையது அல்ல இதனிடையே, தனது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 8 லட்சம் வெள்ளி தன்னுடையது இல்லை என்று அந்த கார்ப்பரல் கூறி யிருப்பதாக எம்.ஏ.சி.சி வட் டாரம் தெரிவித்தது. உதவி சூப்ரிண்டெண்டன் பதவியில் உள்ள தனது மேல் அதிகாரி ஒருவருக்காக அந்த பணத்தை தாம் வைத்திருப்ப தாக அவர் கூறி யிருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த சூப்ரிண் டெண்டன் தற்போது தடுப்புக் காவலில் இருக்கிறார். பணம் பதுக்கி வைக்கப்பட் டிருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்க வில்லை. இந்த பணம் யாருக்குச் சொந் தம், பணம் எங்கிருந்து வந்தது, அவரிடம் ஏன் இவ்வ ளவு பணம் இருந்தது போன்ற வற்றை நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம் என அவ்வட்டாரம் மேலும் கூறியது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img