ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

தமிழ்ப்பள்ளிகளில் இரட்டை மொழி பாடத்திட்டம்.
சனி 20 மே 2017 17:42:36

img

கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக் கான டிஎல்பி எனப்படும் இரட்டை மொழி பாடத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரி ''மே 19'' இயக்கத்தினர் நேற்று கல்விய மைச்சில் மகஜர் ஒன்றை சமர்பித்தனர். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவி யல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு கல்வியமைச்சு கொண்டு வந்த திட்டம் தான் டிஎல்பி. கல்வியமைச்சின் டிஎல்பி கல்வி திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து சீனப்பள்ளிகளும் முற்றாக எதிர்த்தன. இதனால் சீனப் பள்ளிகளில் டிஎல்பி முறையை அமல்படுத்தவில்லை.ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ள துடன் 48 தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நாடு தழுவிய நிலையில் உள்ள இயக்கத்தினர்கள், பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின ரின் எதிர்ப்பை தொடர்ந்து 4 பள்ளிகள் டிஎல்பி அமலில் இருந்து விலகிக் கொண்டன.இருந்த போதிலும் 44 தமிழ்ப் பள்ளிகளில் இதுநாள் வரை டிஎல்பி திட்டம் அமலில் இருந்து வருகிறது என்று மே 19 இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளரான பாலமுரளி கூறினார். தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி திட்டத்தை முற்றாக ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறு த்தி கடந்த பிப்ரவரி மாதம் கல்வியமைச்சுக்கு மகஜர் ஒன்றை நாங்கள் வழங்கினோம்.தேர்வு செய்யப்பட்ட 48 தமிழ்ப்பள்ளிகளும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தகுதி வாய்ந்தவையாக உள்ளன. ஆகவே இதில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது என கல்வியமைச்சு எங்களுக்கு பதில் வழங்கியது. இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில் தான் இளைஞர்களின் முயற்சியில் நாடு தழுவிய நிலையில் 20 விளக்கக் கூட்டங்கள் நடத்தப் பட்டன.இக்கூட்டங்களின் வழி பொதுமக்களுக்கு டிஎல்பி திட்டம் குறித்தும், அதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்தும் முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.எங்களின் முயற்சிகளுக்கு 149 அரசு சாரா இயக்கங்கள் ஆதரவை வழங்கியதுடன் முழு ஒத்தழைப்பும் வழங்கின. இவ்வியக்க பிரதிநிதிகள், பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய இரண்டாவது கோரிக்கை மனுவை வழங்கத் தான் நாங்கள் அனைவரும் மீண்டும் கல்வியமைச்சுக்கு வந்துள்ளோம். எங்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு சாரா இயக்க பிரதிநிதிகளும் வந்தனர்.கல்வியமைச்சர், துணையமைச்சர் யாரும் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் டத்தோ கமலநாதனின் செயலாளர் சசியிடம் அம்மகஜரை நாங்கள் வழங்கினோம். கல்வியமைச்சர் பார்வைக்கு அம்மகஜர் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று பாலமுரளி கூறினார்.இதனிடையே தமிழ்ப் பள்ளிகளில் டிஎல்பியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.இரண்டாவது முறையாக கல்வி யமைச்சுக்கும் மகஜரை வழங்கி விட்டோம். இனி இதற்கு ஒரு முடிவு எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வது தான் எங்களின் இறுதி முடிவாக இருக்கும் என்று டாக்டர் செல்வம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img