செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

அமெரிக்க சாம்பியனை வீழ்த்துவேன்.
சனி 20 மே 2017 13:22:59

img

ஒரு சீனப் படத்தைப் பார்த்து, அதில் வரும் சண்டைக் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் அத்தகைய தற்காப்புக் கலையில் புகழின் உச்சத்திற்கு சிறகு விரித்திருக்கிறார் 22 வயதுடைய அகிலன் தாணி. எம்எம்ஏ (Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மலேசியாவின் முன்னணி வீரராக உருவெடுத்திருக்கும் செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி, விரைவில் சிங்கப்பூரில் நடக்கும் அனைத்துலக ஒன் ஃபைட் (ONE Fighting Championship) கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் வால்டர் வெய்ட் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்காக களம் இறங்கவிருக்கிறார். நடப்புச் சாம்பியனான அமெரிக்காவைச் சேர்ந்த பென் அஸ்க்ரெனை எதிர்த்து சிங்கப்பூர் அரங்கத்தில் மே மாதம் 26ஆம் தேதி அகிலன் போட்டியிடுகிறார். இந்த இடத்தை அடைவதற்காக அகிலன் சொந்த வாழ்க்கையில் அனுபவித்த துயரங்கள், சிரமங்கள், சாவல்கள் மிகக் கடுமையானவை. சின்ன வயதிலேயே அகிலனுக்கு சோதனைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தந்தையை விட்டு தாயார் பிரிந்து சென்று விட்டார். தந்தையின் அரவணைப் பில் வளர்ந்தவர் அகிலன். 16 வயது வரையில் அவருக்கு அண்டை வீட்டுக்காரர்களின் கேலிகள், ஏளனங்கள் மிகுந்த வேதனையைத் தந்தது பள்ளியில் சக மாணவர்களிடம் அகிலன் பட்ட அவமானங்களுக்கு எல்லையே இல்லை.இதற்குக் காரணம், அகிலன் ஒரு குண்டுப் பையன். 16 வயதில் 139 கிலோ எடை. ஒருநாள் அகிலன் ஒரு சீனப்படத்தை பார்க்க நேர்ந்தது. அந்தப் படத்தின் பெயர் ஷா போ லாங். புகழ்பெற்ற நடிகரும் தற்காப்புக் கலை வீரருமான டோன்னி யென் அதில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வந்த ஒரு சண்டைக் காட்சி என்னை மிகவும் கவர்ந்து, என் மனதில் ஆழமாகப் பதிந்தது. சண்டைக் காட்சியில் நடித்திருந்த டோன்னி யென், எந்த வகையான தற்காப்புக் கலையைக் கையாண்டார் என்று ஆராயத் தொடங்கினேன். அதன் பின்னர் பெட்டாலிங் ஜெயாவில் பிரேசிலின் ஜி-ஜிட் சூ எனப்படும் உடல் பயிற்சி கலை வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி செய்யத் தொடங்கிய பின்னர், மூன்று மாதங்களில் 10 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்து விட்டதால் ஏகப்பட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. 18 வயதை எட்டிய போது கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலானிலுள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. மாதம் 1,000 வெள்ளி சம்பளம். அதேவேளையில் அங்கு நடக்கும் உடற்பயிற்சி வகுப்புக்களில் அவர் கலந்து கொண்டார்.இந்தக் காலக்கட்டத்தில் தான் கலப்பு தற் காப்புக் கலைப் போட்டிகளின் மீது கவனம் திரும்பயது. இது நேரடிச் சண்டைகளில் ஈடுபடும் ஒரு தற்காப்புக் கலையாகும். கைகளாலும் கால்களாலும் கடுமையாகத் தாக்குவது, தூக்கி வீசுவது என பல்வேறு தற்காப்புக் கலைகளின் கூட்டுக் கலவையாக இது அமைந்துள்ளது. இந்த தற்காப்புப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் வந்த பின்னர் பிரேசிலின் ஜி-ஜிட் சூ உடற்கட்டு கலை, முவாய் தாய் தற்காப்புக் கலை, மற்றும் குத்துச்சண்டை ஆகியவறில் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டத்தோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடித்தேன் என்று அகிலன் கூறினார்.ஆறு மாதங்களுக்குப் பின்னர் எனது உடல் எடை 129 கிலோவிலிருந்து 93 கிலோவுக்கு குறைந்து விட்டது. 18ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்த ஜிம் மையத்திலேயே தங்கிக் கொண்டேன். சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதித் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஓராண்டு காலத்திற்கு மேலாக ஜிம்மில் தங்கியிருந்த பின்னர், தனி யாக ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெளியே தங்கிக் கொண்டேன். மலேசியாவில் நடந்த பல எம்எம்ஏ போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். இங்கிருந்துதான் எனது இரண்டாவது கட்டப்பயணம் தொடங்கியது என்றார் அகிலன். சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் எம்எம்ஏ அமைப்பன் ஏற்பாட்டிலான ஒன் ஃபைட் போட்டிகளில் பங்கேற்ற அதேவேளையில் அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயிற்சிகளையும் அவர் பெற்று வந்தார். இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலை நாட்டி யுள்ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்தது. அடுத்து மே 26 ஆம் தேதியன்று சிங்கப்பூர் அரங்கில் அமெரிக்க வீரர் பென் அஸ்க்ரென்னை எதிர்த்து கம்பிக் கூண்டு களத்திற்குள் அகிலன் இறங்கவிருக்கிறார். ஒன் எப்.சி. வால்டர்வெய்ட் சாம்பியன் போட்டியில் பென் அஸ்க்ரென்னுக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. காரணம், அவர் நடப்புச் சாம்பியன் என்பதோடு இதுவரை 15 வெற்றிகளைக் குவித்துள்ளார். பென்னை எப்படி தோற்கடிப்பது என்பது எனக்குத் தெரியும். நான் அவ ரைக் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், வால்டர்வெய்ட் பிரிவில் சாம்பயன் பட்டத்தை வென்ற முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற நான் தயாராகி வருகிறேன் என்கிறார் அகிலன். செந்தூல் பண்டார் பாரு அடுக்குமாடி வீட்டைச் சேர்ந்த அகிலனைப் பற்றி பேசிய அவருடைய தந்தை தணிகாசலம், பிறருடன் மரியாதையாக பழகுவதி லும் அன்பு பாராட்டுவதிலும் அகிலன் எனக்கே கற்றுக் கொடுப்பான். எனக்கு எல்லாமும் அவன்தான் என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img