புதன் 14, நவம்பர் 2018  
img
img

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்...வேலூரில் பெண்கள் மீது தடியடி!
வெள்ளி 19 மே 2017 15:34:11

img

வேலூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அழிஞ்சிகுப்பத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து வட்டாட் சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துவந்தனர். ஆனால், அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று காலை அந்தப் பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் இறங்கினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றதால், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியரின் கார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அதனால், அந்தப் பகுதி பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அங்கு வண்டி டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சிகளிக்கிறது. அங்கு, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனிடையே, கடந்த மாதம் திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியதால்,ஏ.டி.எஸ்.பி.பாண்டியராஜன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img