செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

போதைப்பொருள் வைத்திருந்த குற்றம்.
வியாழன் 18 மே 2017 14:19:44

img

460 கிராம் ஹெரோயின் வகையிலான போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை போலீ சார் கைது செய்தனர். அதிகாலை 4 மணியளவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது ஈப்போ, தாமான் சிலிபின் ரியாவில் உள்ள வீட்டோன்றில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது 460 கிராம் போதைப் பொருள் பொட்டலங்கள் வீட்டின் வரவேற்பரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், கூலி வேலைச் செய்யும் 51 வயதான ஆடவர் உட்பட அவரின் மனைவி, நான்கு பிள்ளை, ஒரு மருமகன் மற்றும் இரு மருமகள் என மொத்தம் 9 பேரைப் போலீசார் கைதுச் செய்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் நேற்று நண்பகல் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 28 வயதான மகன், உட்பட இருவரை மே 23ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மற்ற அறுவரையும் வரும் வியாழக்கிழமை வரை தடுப்பு காவலில் வைத்து வாக்குமூலம் பெறும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img