வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அனைத்து தொகுதிகளிலும் அம்னோவை எதிர்த்து மகாதீர் போட்டி!
வியாழன் 18 மே 2017 11:19:51

img

நடப்பு அரசியல் சூழ் நிலையில் வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் துன் டாக்டர் மகாதீரின் பெர்சத்து கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடக்க கட்டமாக பினாங்கு மாநிலத்தில் அம்னோவின் வசம் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடப் போவதாக பார்ட்டி பிரிபூமி பெர்சத்து பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஆனால், ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து எடுக்கப்படும் முடிவை நாங்கள் மதிப்போம் என பெர்சத்து கட்சியின் பினாங்கு மாநில தலைவர் மர்சூக்கி யாஹ்யா கூறினார். துன் மகாதீரும் அம்னோவின் அனைத்து தொகுதிகளிலும் பெர்சத்து வேட்பாளர்களை நிறுத்தும் சாத்தியம் இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட் டியி ருந்தார். வாய்ப்பு கிடைத்தால் பினாங்கில் எல்லா தொகுதிகளிலும் அம்னோவை நாங்கள் எதிர்ப்போம். அரசாங்கத்தில் பல மாற்றங்களை பொதுமக்கள் எதிர்பார்ப்பதால் நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கண்டிப்பாக பெர்சத்து கட்சி அம்னோவை வீழ்த்தும் என்றும் மர்சூக்கி யாஹ்யா சூளுரைத்தார். தற்போது பாஸ் கட்சி பக்காத்தானுடன் உறவை முறித்துக் கொண்டுள்ள இந்நிலையில் கண்டிப்பாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது. இருப்பினும், சுங்கை ஆச்சேவில் கெஅடிலானுக்கும் பாஸுக்கும் நடந்த மோதலைப் போல பக்காத்தான் கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே போட்டாப் போட்டி நடக்காமல் இருக்க, முறையான முடிவு எடுக்கப்படும் என்று மர்சூக்கி யாஹ்யா நம்பிக்கைக் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img