வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

ஃபேஸ்புக்கில் பகீர் போஸ்ட் போட்டுவிட்டு பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை
திங்கள் 15 மே 2017 13:50:44

img

மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர். அவர் தயாரித்த தோல் தாஷே கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. படத்தின் கதையை பலர் பாராட்டியபோதும் படம் ஓடவில்லை. இதனால் தப்கிருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. படத்தால் நஷ்டம் அடைந்ததால் தப்கிருக்கும், அவரது மனைவி பிரியங்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பண நெருக்கடியால் மன நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார் தப்கிர். புனேவில் உள்ள பிரசிடென்ட் ஹோட்டலுக்கு சென்ற தப்கிர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் அறையில் அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்யும் முன்பு தப்கிர் ஃபேஸ்புக்கில் தனது முடிவுக்கான காரணத்தை விரிவாக தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தன்று இறந்த தனது தாயிடம் போவதாக அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.பண பிரச்சனையால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். மேலும் என்னை பற்றி வதந்திகளையும் பரப்பினார் என்று தப்கிர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். என் மனைவி என் மீது பொய் புகார்கள் தெரிவித்தார். எங்களின் 2 குழந்தைகளையும் பார்க்கவே விடவில்லை. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள கொடுத்த பணத்தை வைத்து கார் வாங்கிவிட்டு எப்பொழுது பார்த்தாலும் பணம் கேட்கிறார். பண பிரச்சனை, குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தப்கிர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img