செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

பெறாத பிள்ளைக்கு பேர் வைக்க ஆசைப்படலாமா?
திங்கள் 15 மே 2017 13:15:34

img

(சென்னை) ஜெயலலிதா தான் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டவர் என்று முதல்வர் பழனிசாமி தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திட்டத்தை முடக்க நினைத்தது ஜெயலலிதாதான் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கபாதை மெட்ரோ ரயில் திட்டம் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ஆம் ஆண்டு ஜெயல லிதாவின் தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. ஜெயலலிதா. 29.6.2015 அன்று கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ இரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்ததோடு, சென்னை மெட்ரோ இரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 7-11-2007-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் திரும்ப திரும்ப பொய் சொல்வோம் என்பது போது எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் என்று கூறுவது வடிகட்டிய பொய். அவர் மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைத்தவர். திமுக ஆட்சி காலத்தில் பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 14ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த திட்டப்பணிகளை நானே பலமுறை ஆய்வு செய்துள்ளேன். ஜப்பான் சென்று கையெழுத்திட்டு திரும்பினேன். மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்பதை மத்திய அமைச்சர் வெங்கையா உணர வேண்டும். ஜப்பான் சென்று நிதிக்காக கையெஉண்மையை மறந்து பெற்று எடுக்காத பிள்ளைக்கு பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img