வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

பக்காத்தான் வென்றால் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
ஞாயிறு 14 மே 2017 12:55:41

img

(பெட்டாலிங் ஜெயா) அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி மத்திய அரசைக் கைப்பற்றினால் ஐந்து ஆண்டுகாலத்தில் 10 லட்சம் வேலைகளை உருவாக்கும் என்று பக் காத்தான் இளைஞர்கள் கூறுகின்றனர். அசுத்தமான வேலைகளை ஈர்க்கும் தன்மையுடையவைகளாக மாற்றுவது மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்க ளைக் குறைப்பது ஆகியவற்றின் வழி இதனை அடையும் நோக்கத்தை கூட்டணி கொண்டிருப்பதாகவும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பகுதித் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார். இப்போது 3.3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் அதை 2.5 மில்லியனுக்குக் குறைக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். சரியான சம்பளம் கொடுத்தால், ஒரு மலேசியர் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலையைச் செய்ய முடியும் என்றார் அவர். பினாங்கு மாநில அரசு அதன் நகராண்மைக் கழக வேலைகளில் 2,437 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ஜ.செ.க.வின் டயானா சோபியா முகமட் டாவுட் அக்கூட்டத்தில் கூறினார். அசுத்தமான, ஆபத்தான மற்றும் கடினமான (3டி) வேலைகளில் இளைஞர்கள் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது தவறு என்று கூறிய அவர், நல்ல சம்பளம் கொடுத்தால், அவர்கள் செய்வார்கள் என்றாரவர். புள்ளிவிவர இலாகாவின் தகவல்படி, 2016 ஆம் ஆண்டில் 504,100 பேர் வேலை இல்லாதவர் கள் என்றும் அதில் 60.4 விழுக்காட்டினர் 20 - 29 வயதிற்கு இடையிலான இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img