வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

இறந்த குழந்தையின் உடலுடன் 11 நாட்கள் வாழ்ந்த பெற்றோர்
வியாழன் 11 மே 2017 16:40:59

img

எகிப்தில் உயிரிழந்த தங்கள் குழந்தையின் உடலை 11 நாட்கள் உடன் வைத்திருந்த பெற்றோரின் செயல் மனதை உருக்கும் சம்பவமாக உள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மனைவி Ilse Fieldsend. இவர்களின் மகள் Georgia Fieldsend (3) க்கு கடந்த 2013ல் திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு தனது தாயின் மடியில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவர்களிடம் Georgiaஐ காட்ட அவருக்கு மூளையில் பயங்கர நோய்த் தாக்கம் இருப்பதும் அவர் சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது தெரியவந்தது. ஆனால், ஐந்து நாட்கள் கழித்து Georgia உயிரிழந்துள்ளார். Georgia உடலுக்கு அவர் பெற்றோர் உடனே இறுதி சடங்குகள் செய்ய மன மில்லாமல் 11 நாட்கள் தங்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர். அப்போது நடந்த இந்த சம்பவத்தை சோகத்துடன் Ilse தற்போது உலகுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், என் குழந்தை சடலத்துக்கு அருகில் படுத்துக்கொண்டு அவள் மேல் நான் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என அழுது கொண்டே அவளிடம் கூறினேன். பின்னர் Georgiaவுக்கு பிடித்த உடைகள் மற்றும் ஷூக்களை அணிவித்தேன் என கூறியுள்ளார். பின்னர் Ilse மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் குழந்தையின் இரு பக்கத்திலும் படுத்து கொண்டு கண் கலங்கியுள்ளார்கள். நாட்கள் ஆக, Georgia சடலத்தின் நிறம் மாறியதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து, உடலைப் புதைத்துள்ளனர். அதற்கு முன்னதாக Georgia உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு தற்போது அது ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. அதன் பின்னர், நோயால் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வசூல் செய்து அவர்களுக்கு தரும் Ilse, உடலுறுப்பு தானம் குறித்தும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு 

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக

மேலும்
img
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு 

முறைகேடாக நிதி திரட்டியதாக

மேலும்
img
பிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல் 

பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன்

மேலும்
img
சவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்

மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்

மேலும்
img
2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு 

சவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img