வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

போலீஸ் வேலைக்கு குவிந்த திருநங்கைகள் விண்ணப்பம்!
வியாழன் 11 மே 2017 16:23:31

img

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன்கள் ஆகிய வேலைகளுக்கான எழுத்து தேர்வுக்கு, இம்முறை திரு நங்கைகளிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீய ணைப்போர் பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது. இத்தேர்வுக்கு 6.32 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுக்கு 2.71 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இத்தேர்விற்கு சென்னை, மதுரை, வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வில் முதன் முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலினப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இம்முறை 50க்கும் மேற் பட்ட திருநங்கைகள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு திருநங்கைகள் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பது இதுவே முதல்முறை. இத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள 410 தேர்வு மையங்களில் நடை பெறவுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்குரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை விண்ணப்பதாரர்கள் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தமது OMR விண்ணப்ப எண், பெயர் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img