செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!
புதன் 10 மே 2017 15:22:07

img

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதுகுறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை செய்தபின் முடிவு எடுக்கப் படும்' என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு இன்று நேரில் சந்தித்துப் பேசினார். விவசாயி களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருடன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டத்துக்கு மே 18-ம் தேதி டெல்லி செல்கிறேன். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மே 21-ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை அல்லது பிரதமர் அலு வலகத்தை முற்றுகையிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படும். இந்தியா ஜனநாயக நாடு இல்லை. சர்வாதிகார நாடு. நான் போராட்டத்தைத் தொடங் கினால், ஹெச்.ராஜாவும் தமிழிசையும் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறேன் என்று கூறுவார்கள்' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img