வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம்
புதன் 10 மே 2017 13:59:10

img

ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டியதன் சம்பவம் வரலாற்றில் இதுவே முதல்தடவை என மக்களால் பாராட் டப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி மேற்கொண்ட வாக்கெடுப்பு ஒன் றின்போது பிறந்து ஒருவாரம் ஆன தமது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து பெருமை பொங்க தமது பேஸ்புக் பக்கத்தில் கருத்திட்ட செனட்டர் Larissa Waters, பாராளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை தமது மகள் Alia Joy என்பது பெருமைப்படும் விடயம் என தெரி வித்துள்ளார். மட்டுமின்றி இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவான பணியிடங்கள் மற்றும் தாங்கிக்கொள்ளும் வகையில் அமைந்த குழந்தைகள் காப்பகங்கள் என நாட்டில் அதிகமாக அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மகப்பேறுக்கான 10 வாரகால விடுமுறைக்கு பின் னர் நாடாளுமன்றத்திற்கு திரும்பிய செனட்டர் Larissa Waters, தாய்மார்களுக்கான இந்த சிறப்பு சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொண் டுள்ளார். நாடாளுமன்ற நேரத்தில் பாலூட்டுவதை அனுமதிப்பது குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற விவாதத்தின் போது ஆதரவளித்து குறித்த சட்ட வரைவில் திருத்தம் கொண்டு வரவும் பாடுபட்ட Larissa Waters, இதே சட்டத்தில் ஆண்களுக்கும் சிறப்பு சலுகை பெற்றுத்தர முனைப்பு காட்டினார். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற நேரத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான சட்டம் அமுலில் முன்பிருந்தே இருந்தது. ஆனால் Larissa Waters உள்ளிட்ட செனட்டர்கள் ஒன்றிணைந்து அதற்கான கால அவகாசத்தை நீட்டித்தனர். மட்டுமின்றி 8 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சட் டத்தின் முக்கிய அம்சங்களின் மீது தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளனர். இதே பசுமைக்கட்சியின் செனட்டராக இருந்த Sarah Hanson-Young என்பவரின் 2 வயது குழந்தையை 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவத்தை அடுத்து பலதரப்பட்ட விவாதங்களுக்கு பின்னர் தற்போது சட்ட திருத்தம் கொண்டு வந்ததுடன் சட்டமாகவும் நிறை வேற்றி யுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img