செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

மக்களைச் சந்திக்க முடியாதவர் மந்திரி புசாராக இருக்க தகுதியற்றவர்.
புதன் 10 மே 2017 13:02:33

img

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தங்களை வந்து சந்தித்து தங்களின் மனக்குறைகளை செவிமடுக்க வேண்டும் என்று கிளப் ஹர் மோனி சிலாங்கூர் என்ற அமைப்பு வலியுறுத்தியது. இந்த அமைப்பின் தலைமையில் 12 அரசு சாரா அமைப்புகள் சிலாங்கூர் மாநில அரசாங்க அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். மாநில மலிவு வீடமைப்புத் திட்டங்கள் மக்களுக்கு சுமையினை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக நாங்கள் மந்திரி புசாரை சந்திக்க விரும்பு கிறோம் என்று இந்த கிளப் ஹர் மோனி சிலாங்கூர் அமைப்பின் தலைவர் டாக்டர் வி.சுந்தர் குறிப்பிட்டார். மாநில மந்திரி புசார் வெளியே வந்து எங்களை சந்திக்க வேண்டும். இவர் எங்களை வந்து பார்க்கும் வரை நாங்கள் இங்கேயே கூடாரம் போட்டு காத்திருப் போம் என்று இவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். மந்திரி புசார் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் வந்து எங்களின் மகஜரை பெறுவது என்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. மந்திரி புசாரை காண்பது என்பது பிரம்ம பிரயத்தனமா? மக்களை சந்திக்க மாநில மந்திரி புசார் விரும்பவில்லை என்றால் மந்திரி புசாராக இருப்பதற்கே தகுதியில்லை என்று சுந்தர் சூடாக வினவினார். அஸ்மின் அலி கீழே இறங்கி வந்து எங்களை பார்க்க மாட்டாரா? அப்படியானால் அவர் இறங்கி வந்து எங்களை சந்திக்க விளக்கம் சொல்லும் வரை நாங்கள் இங்கேயே கூடாரம் போட்டு காத்திருப்போம். மலிவு வீட்டின் விலை 43 ஆயிரம். ஆனால் 73 ஆயிரம் வெள்ளிக்கு விற்கப்படுகிறது. பல குளறுபடிகளை இங்கே நாங்கள் ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும். பாதுகாப்பு அதிகாரி கேட் கதவை இழுத்து மூடினார். நிலைமையினை கட்டுப்படுத்த போலீஸ்காரர்கள் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். 50 பேர் கொண்ட அதிருப்தியாளர்கள் ஆவேசமடைந்து நிலைமை மோசமாக போய்விடக்கூடாது என்பதற்காக போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img