திங்கள் 24, ஜூன் 2019  
img
img

பாதுகாவலருக்கு குறைந்த ஊதியமா?
புதன் 10 மே 2017 12:19:12

img

பல்வேறு பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தனது பாதுகாவலர்களில் 108 பேருக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாக கூறப்படும் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான சிஸ்கோ செண்டிரியான் பெர்ஹாட் நேற்று கண்டனத்திற்குள்ளானது. இந்தப் பிரச்சினையை எழுப்பிய பிஎஸ்எம் ஆர்வலர் எம். சிவரஞ்சினியும் சிஸ்கோ பாதுகாவலர்கள் மூவரும், இந்த விவகாரம் தொழிலாளர் இலாகாவால் சரியாக கையாளப்படவில்லை என்றார். சிஸ்கோ நிறுவனத்தினர் விசாரணைக்கு வராமல் இருக்க அனுமதித்ததன் வழி தொழிலாளர் இலாகா பிரச்சினையை மோசமடைய செய்ததாக சிவரஞ்சினி கூறினார்.இந்த பாதுகாவலர்கள் 52 பள்ளிகளில் காவல் பணி புரிகிறார்கள். இந்த பாதுகாவலர்கள் தினசரி 12 மணி நேரம் மாதத்தில் 30 நாளும் வேலை செய்கிறார்கள். நாங்கள் கணக்கிட்டு பார்த்த போது அவர்கள் 2,100 வெள்ளி சம்பளம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு 1,700 வெள்ளி மட்டுமே வழங்கப்பட் டிருக்கிறது. மிகை நேர வேலை விகிதப்படி அல்லாமல் சாதாரண வேலை விகிதப்படியே சம்பளம் கணக்கிடப்பட்டிருக்கிறது என்று சிவரஞ்சினி தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் இலாகாவில் புகார் செய்த மூன்று பாதுகாவலர்கள் உடன் இருக்க அவர் இந்தப் பிரச்சினையை செய்தியாளர் களிடம் எழுப்பினார்.அந்த நிறுவனம் தொழிலாளர் களின் சம்பளத்தில் இருந்து அந்தந்த மாதம் 500 வெள்ளியை கழித்து வந்ததாகவும் அவர் கூறினார். சிஸ்கோவிற்கு எதிரான புகாரை மீட்டுக் கொள்ளும்படி தொடக்கத்தில் புகார் செய்த நால்வரில் ஒருவர் கட்டாயப்படுத் தப்பட்டதாக சிவரஞ்சினி தெரிவித்தார்.புகார்தாரர்களில் ஒருவர் கிளந்தானுக்கு மாறி செல்லும்படி உத்தரவிடப்பட்டார். போக தவறி இருந்தால் புகார்தாரர் வேலை இழக்க நேர்ந்திருக்கும். அவர் தனது புகாரை தொழிலாளர் இலாகாவில் இருந்து மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து வேலை இடமாற்றம் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்றார் அவர்.வேலை இடமாற்றம் செய்யும் உத்தரவு தொடர்பில் சிஸ்கோ 2017 ஜனவரி முதல் தேதி ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கையையொட்டி, நிறு வனத்தின் செயல்பாடுகளை சுமுகப்படுத்த இந்த வேலை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக சிஸ்கோ அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் இருந்து கிடைத்த ஆவணங்களின்படி, சிஸ்கோவில் ஐந்து இயக்குநர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மஇகா முன்னாள் உதவித் தலைவர் கே.எஸ்.நிஜார் என்றும் தெரிய வருகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img