செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

ஊசி, மருந்து, வலி இல்லாமல் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
புதன் 10 மே 2017 10:56:20

img

நாட்டில் முக்கிய உயிர்க்கொல்லி நோய்களான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, இனிப்பு நீர் ஆகிய நோய்களை ஊசி, மருந்து, வலி ஆகியவை இல்லாமல் நாடி துடிப்பின் மூலம் பிராணவாயு அளவைக் கணக்கிட்டு இந்த நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என கூறுகின்றார், டத்தின் டாக்டர் ராஜேஸ்வரி. நண்பனுக்காக இவரை சந்தித்தபோது பல தகவல்களையும் இந்நோய்களை தடுக்கும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்கினார். மனித மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் குருடாகும். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும். இந்த நோய்கள் வந்தபின் சிகிச்சை மேற்கொள்வதை விட வரும் முன் அவற் றைத் தடுப்பதே சாலச் சிறந்தது எனக் குறிப்பிட்டார். வேலை பளு காரணமாக உணவகங்களில் உண்பதே இந்த நோய்கள் வருவதற்கான முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக, துரித உணவகங்களில் உண்பது மிகவும் கெடுதியான விளைவுகளை ஏற்படுத்தும். பரம்பரையாகவும் இந்த நோய் வரக்கூடிய சாத்தியமும் உண்டு. இந்த நோய்களை ஊசி, மருந்து, வலி இல்லாமல் நிவர்த்தி செய்வதே எனது நோக்கமாகும். நாம் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தராமல் சூழ்நிலை யின் காரணமாக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மேலும், இன்றைய காலக் கட்டத்தில் உடற்பயிற்சி என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. 30 வயதில் உடல் பரிசோதனை செய்வதை விட்டு 50 வயதில் நோய்கள் வந்த பிறகு பரிசோதனை செய்து கொள்கிறோம். நாம் உடுத்தும் உடைகூட S, M, L முடிந்து XL வந்து விட்டது. உடல் கட்டழகு உடை வேறு சந்தைகளில் உலா வருகின்றது. இதற்கெல்லாம் மூல காரணம் நமது வாழ்க்கை முறை மாறிப்போய் விட்டதே காரணம் ஆகும்.9 வயதில் இனிப்பு நீர் வியாதி உள்ளவர்களும் உண்டு. 30 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகின்றவர்களும் உண்டு. இதை தடுத்தாக வேண்டிய கடப்பாடு ஒரு மருத்துவராகிய எனக்கும் உண்டு. இந்த நோய்களை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கவிலிருந்து லட்சக் கணக்கான வெள்ளி செலவில் அதிநவீன மருத்துவ சாதனங்களை எனது கிளினிக்கில் வாங்கி வைத்துள்ளேன். இந்த சாதனங்கள் மூலம் மூன்று உயிர்க்கொல்லி நோய்களை நிச்சயம் குணப்படுத்த முடியும். முன்பே குறிப்பிட்டது போல இதில் சிகிச்சை பெறு வதற்கு ஊசி மருந்து ஆகியன பயன்படுத்தப்படாது" என கூறினார் டாக்டர் ராஜேஸ்வரி. இந்த நவீன சாதனங்களை உபயோகித்து நடக்க சிரமப்பட்டவர்களை நடக்க வைத்துள்ளேன். இருதய அடைப்பு உள்ளவர்களை குணப்படுத்தியுள்ளேன். ஈரல்களில் குறை உள்ளவர்களை குணமாக்கியுள்ளேன். மேலும் மற்றொரு முக்கிய அம்சமாக சிகிச்சையின் மூலம் கரு வளர்ச்சியில்லாதவர்களுக்கும் நிவாரணமளித்து அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளேன். இவற்றுக்கெல்லாம் இங்குள்ள அதி நவீன மருத்துவ சாதனங் களே காரணம். இதே சாதனங்களை உபயோகித்து ஒரு சிறு அறுவை சிகிச்சையின் மூலம் வயது குறைந்தாற் போன்று தோற் றத்தை மாற்ற முடியும் என கூறினார் டாக்டர் ராஜேஸ்வரி. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரியான இவர், தனது நிபுணத்துவ டாக்டர் பட்டப் படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளார். மேலும், அழகுக்கலை தொடர்பான பட்டப்படிப்பை ஜெர்மனியில் முடித்துள்ளார். இவரின் திறமையின் காரணமாக பல வெளிநாடுகளில் நற்சான்றிதழ்கள் வழங் கப்பட்டு இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த அங்கீகாரங்கள் மலேசிய இந்திய சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் என்றால் மிகையாகாது. மலாக்கா மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த டத்தின் டாக்டர் ராஜேஸ்வரி தமது வெற்றிக்கு தன் கணவர் டத்தோ டாக்டர் ரவி மிகவும் உறு துணையாக உள்ளதாக குறிப்பிட்டார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ளவும் ஊசி, மருந்து,வலி இல்லாத சிகிச்சை பற்றி அறிந்துகொள்ளவும் என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img