வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மக்கள் நலன் காப்பதில் மலேசிய நண்பன் ஒருபோதும் பின்வாங்காது!
செவ்வாய் 09 மே 2017 14:22:56

img

இந்நாட்டு இந்தியர்களின் நலன் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதனை தட்டிக்கேட்கும் உரிமை, சக்தி, அதிகாரம் தங்களுக்கு இருப்பதை அவர்கள் உணர வேண்டும். குறிப்பாக, அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கென வழங்கப்படும் மானியங்களும், உதவித் தொகைகளும், நிதி ஒதுக்கீடுகளும் முறையாக தங்களுக்கு வந்து சேர்கின்றதா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் இது அவர்களின் உரிமை என்று கூறுகிறார் மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான். ஆளும் தேசிய முன்னணி அரசாங்கமும் எதிர்க்கட்சி வசமுள்ள அரசாங்கமும் இந்நாட்டு இந்தியர்களுக்காக அதிகமான நிதி ஒதுக்கீடுகள் வழங்கி வருவதை நாம் மறுக்க முடியாது. ஆனால், அவை முறையாக அவர்களைச் சென்றடைகிறதா என்பதுதான் இங்கு கேள்வி. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (எம்.ஏ.சி.சி) இன்று தனது பயணத்தை தொடங்கியிருக்கும் மலேசிய நண்பன் யாருக்கும் அஞ்சாமல் மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். எம்.ஏ.சி.சி. நாடு முழுவதும் மேற்கொள்ளும் 3ஜே, கெரா ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக நேற்றிரவு மலேசிய நண்பன் வளாகத்தில் அவ்வியக்கத்தின் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. மலேசிய நண்பனுடன் கைகோர்த்து எம்.ஏ.சி.சி. இந்த அதிரடி இயக்கத்தை தொடங்கியுள்ளது.நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அஹ்மட் உட்பட அதன் மேல்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் வரவேற்புரை நிகழ்த்திய டத்தோ ஷாபி ஜமான் மேலும் பேசுகையில்: மக்கள் நிதி நேர்மையான வகையில் சென்று சேர வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் மலேசிய நண்பன் அதன் அர்ப்பணிப்பை தொடரும். மலேசிய இந்தியர்களுக்கு இதுதான் இப்போதைக்கு மிகவும் முக்கியமான விஷயம். காரணம், நடுத்தர மற்றும் ஏழ்மை நிலைமையில் உள்ள இந்தியர்களுக்கு இது கைக்கொடுக்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் மேம்பட வேண்டு மானால், இன்றையச் சூழலை விட மேம்பட்ட நிலையை அவர்கள் அடைய வேண்டு மானால் அவர்களுக்கு உரியதை நாம் வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். எம்.ஏ.சி.சி ஆணையருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். மலேசிய இந்தியர்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்திற்கு நாம்தான் வித்திட வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் கடமையிலிருந்து மலேசிய நண்பன் என்றுமே தடம் மாறாது.இன்று மற்ற இனத்தவருடன் ஒப்பிடு மேயானால், பொரு ளாதாரம், மேம்பாடு, கல்வி என பல்வேறு நிலையிலும் இந் நாட்டு இந்தியர்கள் பின்தங்கியே இருக் கின்றனர். அவர்க ளுக்கு உதவும் வகையில், அனைத்து நிதியுதவிகளும் அவர்களைச் சென்ற டைவதையும், அத னால் மக்கள் பயன டைவதையும் உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கை வாரியம் ஒன்றை அமைப்பது அவசியமாகும். இந்த இலக்கை நோக்கி எம்.ஏ.சி.சி- யுடன் மலேசிய நண் பன் என்றும் ஒத்து ழைக்கும் என்று டத்தோ ஷாபி நம் பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், புக்கிட் அமான் வர்த் தகக் குற்றவியல் பிரிவின் போலீஸ் ஆணையர் டத்தோ ஏ.தெய்வீகன், மிம் கோய்ன் தலைவர் டத்தோ ஜமாருல் கான், ம.இ.கா உத வித் தலைவர் டத்தோ டி.மோகன், டத்தோ ஜவாஹர் அலி, பிரெஸ்மா தலைவர் அயூப் கான் ஆகியோர் உட்பட நாடு முழுவதுமிருந்து பிரமுகர் களும், பொதுமக்களும், அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img