வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

லஞ்சம்? அதிகார துஷ்பிரயோகம்?
செவ்வாய் 09 மே 2017 13:33:32

img

லஞ்சம் கேட்கிறார்களா? அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா? அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) புகார் செய்ய தயக்கமாக இருக்குமானால் மலேசிய நண்பனிடம் தகவல் தாருங்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் ஆலோசனை கூறினார். லஞ்சத்தை வேரறுப்பதிலும் அதிகார துஷ்பிரயோகத்தை முறிய டிப்பதிலும் நாங்கள் தொடங்கியுள்ள லஞ்சம் ‘கொடுக்காதீர், தீர்த்துக் கொள்ளாதீர், இணங்கிப் போகாதீர்’ என்ற முப்பரிமாணப் பொருளுடன் லஞ்சத்திற்கு எதிரான ‘கெரா’ நடவடிக்கையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்ப் பத்திரிகை சகாவாக மலேசிய நண்பன் விளங்குகிறது. டத்தோ ஷாபி ஜமான் தலைமையில் வெற்றி நடைபோட்டு வரும் மலேசிய நண்பன், எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பெரி யளவில் பக்கபலமாக எங்களுக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக எம்.ஏ.சி.சி.யிடம் புகார் செய்ய தயக்கமாக இருந்தால் எங்களின் பத்திரிகை சகா என்ற முறையில் மலேசிய நண்பனிடம் விவரத்தை தரலாம் என்று டத்தோ ஸூல்கிப்ளி தெரிவித்தார். நேற்று மலேசிய நண்பன் தலைமையகத்தில் எம்.ஏ.சி.சி.யின் ‘கெரா’ இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். நேற்று காலையில் ஆங்கில நாளேட்டிலும் மதியம் சீன நாளேட்டிலும் இரவு மலேசிய நண்பனுடனும் இந்த இயக்கத்தை தொடக்கி வைப்பதாக அவர் சொன்னார். லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் மக்களின் ஆதரவின்றி எங்களால் மட்டும் செய்ய முடியாது. மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டின் மேம் பாட்டையும் மக்களின் நல்வாழ்வையும் சீரழிக்கக்கூடிய லஞ்சத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் முற்றாக துடைத்தொழிக்க முடியும். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். துணிந்து, தாராளமாக புகார் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புகாரும் ஊழலற்ற ஒரு நாட்டில் மக்களின் மேன்மைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் செய்யப்படக்கூடியதாகும். அந்த வகையில் எங்களுடன் இணைந்து இந்த போராட்டத்தில் முன்வந்துள்ள மலேசிய நண்பனுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரி வித்துக்கொள்கிறோம் என்று டத்தோ ஸூல்கிப்ளி தனது உரையில் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img