வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

குறைகளை தகர்த்து சாதனை படைத்தார் பார்கவி
திங்கள் 08 மே 2017 18:36:39

img

வாழ்வில் நம்பிக்கை இருந்தால் நாம் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் நிச்சயம் வெற்றி பெறும். குறை என்பது எவரிடம் இல்லை? பெரும் பாலான சூழல்களில் அது மற்றவர்களின் பார்வையைப் பொறுத்துள்ளது. தன்னிடம் உள்ள குறைகளை ஒட்டுமொத்தமாக வேரறுத்து சாதனை படைத் துள்ளார் ஏழு வயது மது பார்கவி விஜயகுமார். ஆட்டிசம் எனும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மது பார்கவி தன் கைகளால் பென்சிலை கூட பிடிக்க முடியவில்லை. அதனால் அவர் எழுதுவதை விரும்புவதில்லை. அப்படி இருந்தும் ஏழாவது வயதில் சிறுவர்களுக்காக தனது முதலாவது புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். தங்கக் கிளி மற்றும் மாய தேனீர்க்கெண்டி என்ற தலைப்புகளில் மது பார்கவி எழுதிய 24 பக்க புத்தகம் நேற்று முன் தினம் தேசிய தொல்பொருள் காட் சியக அரங்கத்தில் வெளியீடு கண்டது. இந்நிகழ்ச்சியின் போது மது பார்கவி சற்று பதற்றமாக காணப்பட்டாலும், தனது புத்தகத்தில் வெளியான இரண்டு சிறுகதைகளில் ஒன்றை வாசித்தார். தனது தாயார் ஜெகதீஸ்வரி கிருஷ்ணன் உடனிருக்க மது பார்கவி நிதானமாக கதையை வாசித்தது அரங்கில் நிலவிய நிசப்தத்தின் ஊடே நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை அசர வைத்தது. மது பார்கவியின் இந்த வளர்ச்சி ஆச்சரியமளிக்கிறது என்று கூறுகிறார் அச்சிறுமியின் பயிற்றுநரான மகாலட்சுமி தவமணி (37). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்கவிக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகவும் குறைவாக இருந்தது. தனது கையால் பென்சிலை பிடிக்க இயலாத மது பார்கவிக்கு களிமண், கோலி குண்டுகள், பிசைந்த மாவு ஆகியவற்றைக் கொடுத்து கைகளில் பற்றும் சக்தியை அதிகரிக்கச் செய்ததாக அவர் விவரித்தார். மகாலட்சுமி கடந்த 2014 முதல் மது பார்கவிக்கு பயிற்சி அளித்து வருகிறார். என் மகளை வளர்ப்பதை நான் என்றுமே சவாலாகக் கருதியதில்லை. இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்று கூறினார் மது பார்கவியின் தாய் ஜெகதீஸ்வரி.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img