வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

இந்தியர்களிடையே குண்டர் குண்டர்தனம் அதிகரிப்பு.
திங்கள் 08 மே 2017 13:19:30

img

(சுங்கைப்பட்டாணி) இந்திய பள்ளி மாணவர்களிடையே குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், இந்து சமய இயக்கங்கள் ஆகியவற்றின் ஈடுபாடு அவசியமாகும் என கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஜுக்கிர் முகமட் இசா வலியுறுத் தியுள்ளார். குறிப்பாக, கோலமூடா மாவட்டத்தில் இந்திய மாணவர்களிடையே குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதில், அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் உண்மை நிலவரத்தை பற்றி விளக்க மளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ம.இ.கா., அரசு சார்பற்ற இயக்கங்கள், ஆலய பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று ஏசிபி. முகமட் ஜுக்கிர் உடன் சந்திப்பு நடத்தியபோது அவர் இவ் வாறு கருத்துரைத்தார். குண்டர் கும்பல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அண்மையில் கைது செய்யப்பட்ட இடைநிலைப் பள்ளி யைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் நிலவரம் குறித்து அவரிடம் கேட்டறியப்பட்டது. கடந்த மே 3-ஆம் தேதி அம்மாணவர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் எண்கள் பதிக்கப்பட்ட கேக் வெட்டும் நிகழ்வில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அது அந்த 3-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவமாகுமே தவிர பழைய புகைப்படங்கள் கிடையாது என்றும் போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார். இந்த சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு, கெடா மாநில ம.இ.கா.தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங்கும் தானும் மாணவர்களை விடுவிப்பது குறித்து போலீஸ் தலைவருடன் பேசியதாகவும், மாணவர்களை விடுதலை செய்யும் பொறுப்பு அரசாங்க வழக்கறி ஞரிடம் உள்ளது என்று அவர் கூறிவிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ம.இ.கா. மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். இந்த சந்திப்புக்கூட்டத்தில் கெடா மாநில ம.இ.கா. பொறுப்பாளர்கள், சுங்கைப்பட்டாணி அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர் டத்தோ சந்திரன், சுங்கைப்பட்டாணி சுப்ரமணியர் தேவஸ்தான தலைவர் பெ.ராஜேந்திரன், மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img