திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

சட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்
திங்கள் 08 மே 2017 12:54:45

img

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர்கள், சட் டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர். நாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்தது.தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட, 11.35 லட்சம் பேர், இத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய இந்த தேர்வில், முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. அதாவது, 2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் காப்பியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடு மற்றும் ஆபரண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்; மாணவியர் ஆபரணங்கள் அணியக் கூடாது. 'நீட்' இணையதள நேரப்படியே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்; 9:30 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது என, தெரிவிக் கப்பட் டிருந்தது. ஜன., 31ம் தேதியே, இந்த கட்டுப் பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஹால் டிக்கெட் டிலும், தேர்வுக்கு விண்ணப்பித்த, http://cbseneet.nic.in இணைய தளத்திலும், இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள், இந்த கட்டுப்பாடு களே தெரியாமல், நேற்று தேர்வு எழுத வந்தனர். மாணவர்கள் பலர் முழுக்கை சட்டை அணிந்திருந்த தால், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. நிலைமையை சமாளிக்க, முழுக்கை சட்டையை அரைக்கை அளவுக்கு, துண்டித்து விட்டு, தேர்வறைக்குள் சென்றனர். மாணவியர், மூக்குத்தி, காது வளையம், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால்,தேர்வு மையத்தின் முன்,அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின், பாசி, ஊசி போன்ற ஆபரணங்களுடன் வெளியே, மூன்று மணி நேரம் காத்திருந்தனர். தேர்வர்கள் பலர், 9:30 மணிக்கு மேல், தாமதமாக வந்தனர். போக்குவரத்து பிரச்னை; தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை என, பல காரணங்களை கூறி, கெஞ்சினர். ஆனாலும், தாமதமாக வந்தோர், தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: மனித உயிர்களை காப்பாற்றும் புனிதமான, மருத் துவ தொழில் படிக்க வரும் மாணவர்கள், பொறுப்பு டன் இருக்க வேண்டும். எனவே தான், தரமான, தகுதியான டாக்டர்கள் வரவேண்டும் என, மத்திய அரசு, 'நீட்' தேர்வை அமல்படுத்தி உள்ளது. தேர்வுக் கான கட்டுப்பாடுகளையேபடிக்காமல் அலட்சிய மாக இருப்போர், மருத்துவ படிப்பை முடித்து, எப்படி தரமான சிகிச்சை அளிக்க முடியும். பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்களும், மாணவர்களுக்கு, தேர்வு கட்டுப் பாடுகளை உணர்த்தவில்லை. மனப்பாட கல்விக்கே முக்கியத்துவம் என்பது போல, தேர்வுக்கான பாடத்தை மட்டும் மன ப்பாடம் செய்து விட்டு, மற்ற எதையும் தெரியா மல் வந் தோர், அவதிக்கு ஆளாகினர். தங்களுக்கான தேர்வு மையத்தையும், தேர்வு நடை பெறும் நாளான நேற்று காலையில் தான், பலர் தேடியதாக கூறுவது வே தனையாக உள்ளது. மருத்துவ படிப்புக்கான தேர்வை எழுதுவோர், முதல் நாளிலேயே தேர்வு மையத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளாதது, பொறுப்பின் மையை காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். சேலம், மூன்று ரோடு வித்யபாரதி பள்ளியில், 'நீட்' தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு காலை, 9:30 மணி வரை மாணவர் கள் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த பார்கவி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நிஷாந்தி, சேலம் இன்பசேகரன் உள்ளிட்டோர், ஐந்து நிமிடம் தாமத மாக வந்தனர். அவர்களை, தேர்வு மையத்திற் குள் அனுமதிக்கவில்லை. இதனால், மாணவர் கள் தங்கள் பெற்றோரு டன், பள்ளியை முற்றுகையிட்டனர்; சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால், போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. தாமதமாக வந்த மாணவர்கள், இறுதியில் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img