ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

சேகர்ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்கள் பெயர்களை வெளியிட வேண்டும்
திங்கள் 08 மே 2017 12:50:54

img

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நடந்த பேரங்கள் குறித்தும் தொடர்புகள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோருக்கும் சேகர் ரெட்டி பெருமளவில் பணம் கொடுத்ததற்கான குறிப்புகள் அந்த குறிப்பேட்டில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந் திருப்பதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதற்காக அவர்கள் மூலம் சாதித்த பலன்கள் குறித்தும், பெற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பேட்டில் எழுதப்பட்டிருக்கிறது. இத்தகவல்களின் அடிப்படையில் தான் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் இல்லங்களில் வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ரெட்டியின் குறிப்பேட்டில் பெயர் இடம்பெற்றிருந்த 4 பேரிடம் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் தவிர மீதமுள்ள மூவரும் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டிருப்பதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமான வரித்துறை அக்குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்புப் பிரிவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கண் காணிப்பு ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பவர் கிரிஜா வைத்தியநாதன் தான் என்பதால், அவர் தான் முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள் மீதான குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஆனால், வருமானவரித்துறையிடமிருந்து கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் எந்த விசாரணைக்கு ஆணையிடப்படாதது ஐயங்களை ஏற்படுத்துகிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பு உலகமறிந்த ரகசியம் தான். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் 197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி வழங்கியதாக அப்போதே குற்றச்சாற்று எழுந்தது. ஆனால், ரூ.570 கோடி கண்டெய்னர் பண மர்மம் மறைக்கப்பட்டதைப் போன்றே, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வலிமையான உறவு காரணமாக சேகர் ரெட்டி பணம் கொடுத்த விவகாரமும் மறைக்கப்பட்டது. பணம் மதிப்பிழத்தல் விவகாரம் காரணமாக நாடு முழுவதும் புதிய ரூபாய் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில், சேகர் ரெட்டி இல்லத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் தாள்கள் உட்பட மொத்தம் ரூ.170 கோடி ரொக்கமாக கைப்பற்றபட்ட விவகாரமும் ஊரறிந்த உண்மை தான். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி பணத்தை அள்ளி வீசியதும், அதற்கு பதிலாக மணல் அள்ளும் ஒப்பந்தம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெற்றதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு இருக்கும் போது சேகர்ரெட்டியிடமிருந்து அமைச்சர்கள் பணம் பெற்றது குறித்து விசாரிக்க தலைமைச்செயலாளர் தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் நேர்மையான அதிகாரி. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் வரு மானவரித்துறையே ஆதாரங்களை அளித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்ட பிறகும் அதுபற்றி விசாரணை நடத்தாமல் தாமதிப்பது சரியல்ல. எனவே, சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும். இவ்வாறு டாக்டர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img