வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

ஜொகூரில் சோழ ராஜ்யம் வேரூன்றியுள்ளதா?
ஞாயிறு 07 மே 2017 10:17:25

img

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்கா ஆற்றின் அடியில் 13 ஆம் நூற்றாண்டின் மஜாபாஹிட் சாம்ராஜ்யத்தின் வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது போன்று ஜொகூர், கோத்தாதிங்கியிலும் சோழ ராஜ்யம் வேரூன்றியிருப்பதாக சில தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு காட்டுப்பகுதியில் பழங்காலத்து கோட்டையின் சிதைந்த கற்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அது சோழ ராஜ்யத்திற்கான தடயங்களாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.ஜொகூரின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிதைந்த பழங்காலத்து கோட்டையின் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் சோழ ராஜ்யம் வேரூன்றியிருந்தது உண்மையாக இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. கி.பி.1377 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்ட கோட்டையை கண்டு பிடிக்கும் நோக்கில் பி.கணேசன் தலைமையிலான குழுவினர் அந்த சிதைந்து போன கோட்டையின் கற்களையும் சிதறிய பாகங்களையும் கண்டு பிடித்ததாக கூறுகின்றனர். அங்கு கற்படிகள், கோட்டை சுவர்கள், இணைப்புக் கற்கள் போன்றவை அதிகம் தென்படுவதாக தெரிவித்த பி.கணேசன் மிகவும் செங்குத்தான மலைப்பகுதியில் அந்தக் கோட்டை இருந்துள்ளதாகவும் தெரி வித்தார். மலைப்பகுதிக்கு செல்வது மிகவும் கடினமான ஒன்று என வர்ணித்த அவர் வித்தியாசமான உலகை காண்பது போல் அவ்விடம் காணப்படுவதாக குறிப் பிட்ட பி.கணேசன் ஒரு மிகப் பெரிய கோட்டை அங்கு சிதைந்து புதையுண்டு கிடப்பதாக தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார். மலைக்குச் சென்ற மூவ ரில் இருவரின் கேமராக்கள் செயல்படாத நிலையில் இது இங்கு பலமுறை நடந்த சம்பவமாக கூறப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் மிகப் பிரமாண் டமான அக்காட்டுப் பகுதிக்கு அருகில் சோழ காலத்தின் மூன்று கப்பல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் நம்பப்படுகிறது என குறிப்பிட்டார். இதற்கு முன்பாக அந்த காட்டுப் பகுதிக்கு வந்த போது சோழ காலத்து கல்வெட்டுக்கள் கண்டு பிடித்ததையும் சுட்டிய பி.கணேசன் மீண்டும் இப்பகுதிக்கு வருகை மேற்கொண்டு மலையிலும் ஆற்றுப் பகுதியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவ்விடம் தமிழர்களின் பூர்வீகம் என கருதப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் அங்கு மூழ்கி கிடக்கும் மூன்று கப்பல்களை வெளியே கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதே பகுதியில் சோழ காலத்து கோவில் ஒன்று இருப்பதாக நம்பப்படும் வேளையில் அந்த காட்டுப் பகுதிக்குள் நுழைய சிரமமாக இருந்தாலும் நம் பிக்கையுடன் மீண்டும் அங்கு செல்ல விருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பயணத்தில் பி.கணேசனுடன் ந.கோபிநாதன், சி.ரவிந்திரன், அமாட் தஷ்ரிப் பின் ரம்லி ஆகியோர் இடம் பெற்ற வேளையில் சோழர்களின் சாம்ராஜ்யம், சூழ்ச்சிகளால் அழிக்கப்பட்ட ஸ்ரீ விஜயா பேரரசுவின் ஆத்மாக்கள் இங்கு நடமாடிக் கொண்டிருப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img