திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

ஜெ.கால்களை வெட்டி பாதாள அறைய திறந்தாரா சசிகலா?
ஞாயிறு 07 மே 2017 09:42:24

img

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபா, பணம் நகைகளை சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தனர் என்ற தகவல்கள் பரவி வருவதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணமடைந்து 5 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை. நீதி கேட்டு நெடும்பயணம் கிளம்பி விட்டார் ஓபிஎஸ். காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பொன்னையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. போயஸ் தோட்டத்து பாதாள அறை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் ரகசிய பாதாள அறை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது போயஸ் கார்டன் ரகசிய அறையில் ரொக்கமாக 25,000 கோடி ரூபா இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆபரண நகைகளை கைப்பற்ற அவரது தோழி சசிகலா மாஸ்டர் பிளான் ஒன்றை அரங்கேற்றி அதனை தினகரன் மூலம் கச்சிதமாக முடித்ததாக தகவல்கள் வருகின்றன. பயோமெட்ரிக் லாக்கர் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, போயஸ் கார்டன் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தாலும், பணம் இருக்கும் ரகசிய அறையில் சசிகலாவால் நுழைய முடியவில்லை. அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் விரல் ரேகைகள் மூலம் பயோமெட்ரிக் முறையில் லாக் செயப்பட்டிருந்தது. இதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகைகள் தேவை. அதனால் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுக்க சசிகலா உத்தரவிட்டார் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பணம், நகைகள் கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களாவில் பதுக்கப்பட்டதாகவும், போயஸ் தோட்டத்து பாதாள அறையில் இருந்த அத்தனையும் துடைத்து எடுக்கப்பட்டு கண்டெனர்கள் மூலம் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதற்கு மூளையாக செயல்பட்டது தினகரன் தான் எனவும் இப்போது தகவல் பரவி வருவதாகவும் பொன்னையன் பேசினார். கொடநாடு மர்மம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த மரணத்தில் உள்ள மர்மங்களை தெரிவிக்க அரசு மவுனம் சாதிக்கிறது. விரைவில் போலீசார் கண்டு பிடித்து அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சி. பொன்னையன் கேட்டுக்கொண்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
img
`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை

சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது.

மேலும்
img
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!

சீனிவாசன் சாலையின் ஓரத்தில் நின்று போன்

மேலும்
img
சோபியாவை போலீசார் மனரீதியாக சித்ரவதை செய்துள்ளனர்: சோபியா வழக்கறிஞர் புகார்

சோபியா மற்றும் அவரது தந்தை சாமி

மேலும்
img
இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

கடந்த 20ந் தேதி தன்னுடைய மகள்கள் படிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img