ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

2017 அனைத்துலக நரம்பணுவியல் போட்டி.
ஞாயிறு 07 மே 2017 08:41:03

img

கடந்த 2-3 மே 2017 தேசிய அளவில் நடைபெற்ற நரம்பணுவியல் போட்டி 2017 (Malaysia Brain Bee 2017) மாணவர் எல்வின் ராஜ் 17, நரம்பியல் அமைப்பு, மூளை சம்பந்த நோயாளிகளின் சோதனை உள்ளடக்கிய இப்போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தில் வாகை சூடினார். மலேசிய நரம்பணுவியல் கழகம் மற்றும் மலேசிய கல்வி யமைச்சின் ஒத்துழைப்புடன் கிளந்தான் தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி தேர்வு சுற்றில் தங்களின் மாநிலத்தை பிரதிநிதித்து 27 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் 9 மாணவர்களுடன் களம் இறங்கிய மாணவர் எல்வின் ராஜ் நரம்பணுவியல் மற்றும் மூளை சம்பந்த நோய்களின் தீர்வு உள்ளடக்கிய நேர்முக கேள்வி பதில், எழுத்து முறை சோதனைகளில் மிக சிறப்பாக பதிலளித்து முதல் இடத்தில் வாகை சூடினார். கடந்த மார்ச் மாதம் நாடளவில் நடைபெற்ற தேர்வு சுற்றில் தேர்வு பெற்ற எல்வின் தேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 400 பக்கங்கள் அடங்கிய நரம்பணுவியல் மற்றும் நரம்பியல் அமைப்பு பற்றிய நூல்களை கற்றுதான் இத்தேர்வு சுற்றில் தம்மால் சாதிக்க முடிந்ததாக கூறினார். நரம்பியல் மருத்துவராக இலட்சியம் கொண்டிருக்கும் எல்வின் தன் வெற்றிக்கு காரணம் தன் ஆசிரியர்கள் வழிகாட்டுதலும், பெற்றோரின் ஊக்குவிப்பும், மற்றும் நேரமேலாண்மையும் முக்கிய காரணம் எனவும் கூறினார். வரும் 3-6 ஆகஸ்ட் 2017இல் அனைத்துலக (International Brain Bee 2017) நரம்பணுவியல் போட்டி 2017 இல் மலேசியாவை பிரதிநிதித்து வாஷிங் டனில் பங்கேற்கவிருக்கிறார். ஸ்ரீ பிந்தாங் உத்தாரா தேசிய இடைநிலைப் பள்ளி மாணவரான எல்வின் ராஜ் போட்டியில் முதலிடத்தில் விருது வென்றது மட்டுமில்லாமல் அல் பிரூனி விருது 2017 என்னும் இன்னொரு விருதையும் பெற்றார். இந்த விருது அல் பிரூனி என்னும் ஒரு இளம் இஸ்லாமிய விஞ்ஞானியின் ஞாபகர்த்தமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளாக அனைத்துலக ரீதியில் நடைபெறும் இப்போட்டியானது கடந்த 6 வருடங்களாக நம் நாட்டில் நடைபெற்று வந்தாலும் முதன் முறையாக இரண்டு விருதுகளையும் வென்ற சிறப்பு எல்வின் ராஜையே சேரும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img