செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

இந்துக்களை முஃப்தி ரணமாக்கி விட்டார்.
ஞாயிறு 07 மே 2017 08:13:08

img

இந்து சமயத்தை இழிவுப்படுத்தி பேசியதாக பெர்லிஸ் முஃப்தி அஸ்ரிக்கு எதிராக இந்துக்கள் நேற்று நாடுமுழுவதும் கொதித்து எழுந்து, போலீஸ் புகார் களை செய்தனர். இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய சமுதாயத்தை சேர்ந்த பல அரசு சாரா இயக்கங்கள் தங்கள் புகார்களில் தெரிவித்துள்ளன. தலைநகரில் பல இந்திய இயக்கங்கள் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தன. நாடு தழுவிய நிலையில், அஸ்ரிக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட வேண்டும் என்ற இயக்கத்தின் முதல் கட்டமாக நேற்று செந்தூல் போலீஸ் நிலையத்தில் இது மேற் கொள்ளப்பட்டது. ஹிண்ட்ராப் தலைவரான வேதமூர்த்தி தலைமையில், ‘பெர்சத்துவான் ராபாட்’, மலேசிய குருக்கள் சங்கம், சிலாங்கூர் இந்து சங்கம், மலேசிய இந்திய இளைஞர்கள் சங்கம் மற்றும் 10 அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் 20க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்களை ஒட்டுமொத்தமாக நேற்று செந்தூல் போலீஸ் நிலையத்தில் செய்தன. அதுமட்டுமின்றி, கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலான், கெடா, பேரா பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் பல அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குழுவாக போலீஸ் புகார்கள் அளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக வேதமூர்த்தி கூறினார். பல இன மக்கள் வாழும் இந்த மலேசியாவில் அடுத்தவர்களின் சமய நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவது சரியில்லை. அவரவர்களின் மத நம் பிக்கைகளைப் பற்றி இழிவாக பேச யாருக்கும் உரிமை இல்லை. அப்படிப்பட்ட செயல் இந்நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும். எனவே அதனைத் தடுப்பது போலீஸ் துறையின் கடமை என்றார் வேதமூர்த்தி. அஸ்ரி மீது அளிக்கப்படும் போலீஸ் புகார்களை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் தீவிரமான முறையில் அணுகி, அஸ்ரியை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ‘பெர்சத்துவான் ராபாட்’ தலைவர் ராஜரத்தினம் கோரிக்கை விடுத்தார். இந்து சமயத்தை இழித்துரைக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஒரு கவிதையை பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி அபிடின் பதிவிறக்கம் செய்து இருந்தார். அதேபோன்று ஒரு காணொளியில் இந்தியாவில் இந்தியர்கள் தாழ்ந்த சாதியினர், அவமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால், அவர்கள் பிரிட்டிஷாரால் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு உரிமைகளை கோரினர் என்று அஸ்ரி கூறியுள்ளார். இந்தியர்கள் மலே சியாவில் அனுபவிக்கும் வாழ்க்கை அவர்களின் மூல நாட்டில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு மேலானது என்றும் தெரிவித்து இருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img