புதன் 21, நவம்பர் 2018  
img
img

பினாங்கு லிட்டல் இந்தியாவில் பெருகி வரும் மதுபானக் கடைகள்!
சனி 06 மே 2017 11:32:17

img

(ஜார்ஜ்டவுன்) பினாங்கு, லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள் பெருகி வருவது கண்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது. வீடுகள், அலு வலகங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கப்படக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலை வர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ் கூறினார். இந்த மதுபானக் கடைகள், கடைகளுக்கு வெளியேயும் நாற்காலி மேஜைகளைப் போட்டு வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்குகின்றன. இவ்வாறு போடப்படும் நாற்காலி மேஜைகள் சில சமயங்களில் பக்கத்து வீடு, எதிர்வீட்டில் உள்ளவர்களில் இடங்களையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு நிரப்பிக் கொண்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் கொடுத்துள்ளனர் என்றும் இட்ரிஸ் கூறினார். லிட்டல் இந்தியா குடியிருப் புவாசிகள், வியாபாரிகள், அலுவலகப் பணியாளர்கள், வேலை நேரம் முடிந்தவுடன் இவ்வாறு அத்துமீறி, எல்லைமீறி நடக்கும் மதுபான விற்பனை தொடர்பாக தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர். மதுபானம் அருந்திவிட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள் பவர்களால் அங்கு குடியிருப்போர் மற்றும் பணி புரிவோரின் பாதுகாப் புக்கும் பங்கம் விளைந்துள்ளது. லிட்டல் இந்தியா என்றில்லாமல் சூலியா சாலையிலும் நிறைய மதுபானக் கடைகள், மதுபானம் குறைந்த விலையில் கிடைப்பதாக விளம்பரம் செய்து மக்களை ஈர்த்து வருகின்றன. பெரும்பாலும் இவ்வாறான மதுபானக் கடைகள் இங்கு சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டவருக் காகவும், வெளிநாட்டுத் தொழிலாளர் களுக்காவும் திறக்கப்படுகின்றன. ஆனால் இங்குள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அவர்களுடைய நலனுக்கு முன்னுரிமை கொடுக் கப்பட வேண்டும் என்றார் இட்ரிஸ். ஸ்திரிட் ஆப் ஹார்மொனி, குவாங் இம் சீனக்கோயில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கப்பித்தான் கெலிங் மசூதி ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு அரு கிலும் இந்த மதுபானக் கடைகள் இருப்பதையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கின்ற காரணத்தால் அதன் அருகில் உள்ளவர்கள் மிகவும் மரியாதையோடும் பணிவோடும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குடித்துவிட்டு அமர்க்களம் செய்வதால் அவ் விடங்களின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்றார் இட்ரிஸ். மதுபானக் கடைகளை நடத்து வதற்கான உரிமங்களை சுங்க இலாகா வழங்குகிறது. ஆகையால் உரிமம் வழங்குவதற்கு முன்பு இந்தக் கடைகள் எங்கு நிறுவப்படவிருக்கின்றன என்பதை அவர்கள் ஆராய்ந்த பிறகே உரிமத்தை வழங்க வேண்டும். சில மேலை நாடுகளில், மது அருந்துவது ஒரு கலாச்சாரமாக உள்ள நாடுகளில் மதுபானக் கோப்பைகளை, குவளைகளை வெட்டவெளியில் வைக்கக் கூடாது என்ற ஒரு சட்டம் உள்ளது. ஆனால் மலேசியாவில் எப்படியும் செய்யலாம், எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற ஒரு நிலைதான் உள்ளது. அதனால்தான் உள்நாட்டு மதுபானக் கடைகள் எந்த வித தடங்கலும் இல்லாமல் சாலை ஓரங்களில் நாற்காலி மேஜைகளைப் போட்டு கடை நடத்துகின்றன. 2013ல் சிங்கப்பூரில் அதிக மதுபானம் அருந்திவிட்டு நிகழ்ந்த கலவரத்தை நாம் கண் முன்னே கொண்டு வர வேண்டும். பினாங்கு, லிட்டல் இந்தியாவில், தங்கள் இஷ்டத்திற்கு செயல்படும் மதுபானக் கடைகளை பொதுமக்களின் நலன் கருதி இழுத்து மூட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img