ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

ஊழல்வாதிகள் வெற்றிபெற்றாலும் பிடிப்போம்.
வெள்ளி 05 மே 2017 12:36:47

img

(புத்ராஜெயா) ஊழல்வாதிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும்கூட அவர்களைப் பிடிப்போம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சூளுரைத்துள்ளது. ஊழல் பேர்வழிகளை விட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஊழல் மற்றும் அதிகார அத்து மீறல் போன்றவற்றில் சம்பந்தப்பட் டவர்களை தவிர்த்து களங்கமற்ற தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸுல்கிப்லி அக மட் வாக்காளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக கடந்த ஜூலையில் பதவி ஏற்ற அவர், தாம் தேர்தலுக்குப் பின்னர் கடும் நடவடிக்கைகள் எடுக்கத் தயக்கம் காட்டப்போவதில்லை என்றார் அவர். மேலும், ஊழல் தடுப்பு ஆணையம் பொதுநலம் காப்பதில் அதன் கடப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நான் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிடுவேன். இது ஏனென்றால் அரசியல்வாதிகள் தூயவர்களாக இருக்க வேண்டும். அதிகாரம் பெற்றதும் சிலர் ஊழல்வாதிகளாகி விடுகிறார்கள் என்று ஸுல்கிப்லி மேலும் கூறினார். நேற்று புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் பத்திரிகையாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த உறுதியை அளித்தார். மக்களுக்காக ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகள் மக்களிடமே சென்று சேர்வது அவசியம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை கமிஷனர் டத்தோ ஜுல்கிப்ளி வலியுறுத்தினார். இந்திய நீல பெருந்திட்டத்தின் கீழ் மற்றும் பெல்டா, பெல்க்ரா போன்றவற்றுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. ஒதுக்கீடு செய்யப்படும் தொகையின் பயனும் பலனும் உரிய மக்களுக்கு சென்று சேருவதில்லை. இவ்விஷயத்தில் நிதி நிர்வகிப்பு ஒழுங்காகவும் முறையாகவும் இருக்க வேண்டும். இதில் அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டால் இதுவும் ஒரு விதமான ஊழ லாகும். மலேசிய ஊழல் தடு ப்பு ஆணையம் இவற்றை எல் லாம் கண்காணிக்கும் என்று டத்தோ ஜுல்கிப்ளி தெரிவித்தார். இந்த பெருந்திட்டத்தின் வழி இந்தியர்களுக்கு உதவ பிரதமர் எண்ணங் கொண்டு ள்ளார். ஊடகத்துறையினரிடம் ஏறத்தாழ 3 மணி நேரம் நடை பெற்ற கலந்தாய்வில் தலைமை கமிஷனர் பல விஷ யங்களை இழையோட விட் டார். ஊழலை வெறுத்து ஒதுக் கும் கலாச்சாரம் மக்கள் மத்தி யில் மேலோங்க வேண்டும். லஞ்சம் வாங்குவதும் குற்றம். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். தலைமை கமிஷனராக டத்தோ ஜுல்கிப்ளி பொறுப்புக்கு வந்த பிறகு அவர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதை பலர் பாராட்டினர். ஊழலை எதிர்த்து போராடுவதில் ஆணையத்திற்கு ஊடகத்துறை உறுதுணையாகவும் அருந்துணையாகவும் பெருந்துணையாகவும் இருக்க இயலும். மக் களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ப மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்பட வேண்டியுள்ளது. ஆணையத்தி ற்கும் மக்களுக்கும் இடையே உள்ள நம்பகத்தன்மை, நம்பிக்கை அளவு முழுமைப் பெற வேண்டும் என்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பு. ஊழலின் தாக்கம் ஒட்டு மொத்தாக அனைத்து அளவிலான சமூகத்தை பாதிக்கும். இத்தகைய எதிர்மறையான தாக்கத்திலிருந்து எவருமே தப்பிக்க இயலாது என்றும் டத்தோ ஜுல்கிப்ளி கூறினார். கையூட்டால் வீடு விலையேற்றம் ஒரு வீடு நிர்மாணிப்புப் பணி தொடர்பில் இதர காரியங்களை துரிதமாக சாதிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கையூட்டு வழங்கப்படுகிறது. இதனால் வீட்டு விலையில் வில்லங்கம் ஏற்படுகிறது. கையூட்டு கொடுப்பதால் அதனை எல்லாம் வீடு வாங்குவோர் தலையில் கட்டி விடுகிறார்கள். அதாவது 20 முதல் 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக வீட்டு விலை இருக்கிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுபோன்ற விவகாரத்தை இப்போது ஆராய்ந்து வருகிறது. தகவல் தருவோருக்கு பாதுகாப்பு ஊழல் நடவடிக்கை சம்பந்தமாக தகவல் தருவோருக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தக்க பாதுகாப்பு வழங்கும். சம்பந்தப்பட்ட நபரின் விவரம் பரமரகசியமாக வைத்திருக்கப்படும். புலனாய்வு பத்திரிகையாளர் தேவை ஒரு விவகாரத்தை ஊடகத் துறை ஆக்ககரமான வழியில் பூதாகரமாக்கும்போது அந்த விவகாரத்திற்கு விடியல் பிறக்கிறது. துன் டாக்டர் மகாதீர் காலத் தில் ஊடகத்துறை அரசியலமைப்பு சட்ட நெருக்கடியினை முன்னிலைப்படுத்தி மக்கள் முன்பு வைத்தபோது அதற்கு தக்க தீர்வு ஏற்பட்டது. எனவே பத் திரிகைத் துறையின் பணி மகத்தானது என்பதனை தான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாக டத்தோ ஜுல்கிப்ளி குறிப்பிட்டார். வேட்பாளர் தேர்வு எங்கள் பணியல்ல அரசியல் கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறுவதும் எங்களின் வேலை அல்ல. வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்பாக இவர்க ளின் பின்னணி எப்படி உள்ளது என்பதில் தக்க வழிகாட்டுதலை வழங்க ஆணையம் ஆயத்தமாக இருக்கிறது. இதனை ஒரு கட்டாயமான முறையாக்க நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு செய்வதும் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. மற்றொரு விஷயத்தையும் டத்தோ ஜுல்கிப்ளி விவரித்தார். ஊழல் நடவடிக்கை பற்றி நாங்கள் விசாரணை செய்கிறோம். பிறகு அறிக்கையினை சமர்ப் பிக்கிறோம். பிறகு இறுதி முடிவு எடுப்பது நீதிமன்றத்தை பொருத்தது. எனவே இத்தகைய அதிகாரத்தையும் நாங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அது அதிகாரப் பிரிவு முறையிலுள்ள தலையீட்டு வரம்பினை மீறுவதாக அமையும். ஊழலை நீரிழிவு நோயுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இதனை முற்றாக ஒழிக்கப்படாவிட்டாலும் கூட இதனை வெகுவாக கட்டுப்படுத்த இயலும் என்று கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு - பத்திரிகையாளர் குழு ஒன்றும் இறுதியில் அமைக்கப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img