வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மகன் தற்கொலையா விரிவான விசாரணை தேவை-தந்தை கோரிக்கை
வெள்ளி 05 மே 2017 12:14:59

img

தன் மகன் எஸ்.பிரவின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணை தேவை. அதே வேளையில் தகவல் சாதனங்கள் தவறான தகவல்கள் வெளியி டுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாணவனின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். பிரவினின் தந்தை செல்வ ராஜூ நேற்று மாலை நீலாய் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். வழக்கறிஞர் சா கீ சின், நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஐ.அருள்குமார் ஆகியோர் தார்மீக ஆதரவு வழங்கும் வகையில் அவருடன் போலீஸ் நிலையம் சென்றிருந்தனர். தன் மகன் மரணம் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்கள் சொல்வதை விடுத்து முறையான போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செல் வராஜூ தனது புகாரில் கூறியுள்ளார். தன் சக மாணவர்களால் வலுக்கட்டாயமாக வாயில் விஷம் ஊற்றப்பட்டதாக அம்மாணவன் போலீஸ் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறான். கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அம்மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் மரணமடைந்தான். இதனிடையே, பிரவின் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியின் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரி யவருவதாக நீலாய் போலீஸ் கூறியுள்ளது. இதனிடையே தனது சக மாணவர்களால் விஷம் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ள, மரண மடைந்த மாணவர் பிரவின் செல்வராஜூ (15) உண்மையில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை புரிந்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் பூர் வாங்க புலனாய்வுகள் காட்டுகின்றன. அச்சிறுவன் மீதிலான மருத்துவ அறிக்கையுடன், அவனது நெருங்கிய நண்பனுடனும் மற்ற சாட்சிகளையும் விசாரித்த தன் அடிப்படையில் இது தெரிய வருவதாக நீலாய் ஓசிபிடி சூப்ரிண்டெண்டன் ஜால்டினோ ஜாலுடின் நிருபர்களிடம் கூறினார். மரணமடைந்த மாணவன் சக பள்ளி மாணவி ஒருத்தியுடன் காதல் வயப்பட்டிருந்ததாகவும், அம்மாணவி அவனை நிராகரித்ததை தாங்கிக்கொள்ளாமல் அவன் விஷம் அருந்தியதாகவும் அவர் விவரித்தார். அம்மாணவி தனது காதலை ஏற்றுக்கொள்ளத் தவறினால் விஷம் அருந்தி தற்கொலை புரிந்துகொள்ளப்போவதாக அவன் ஏற்கெனவே தனது நண்பனிடம் கூறியிருக்கிறான்.கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி மினரல் போத்தல் ஒன்றில் நீல நிறத்தினாலான திரவத்தை பிரவின் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வந்ததை அவனது நெருங்கிய நண்பன் போலீசாரிடம் தெரிவித்தான். தனது பழைய பள்ளிக்கூடத்திற்கு வெளியே இருவரும் சந்தித்த போது தனது உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக அவன் தனது நண்பனிடம் கூறி யதாக ஜால்டினோ குறிப்பிட்டார்.அந்த நண்பன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நீலாய் மைடின் பேரங்காடி பின்புறம் உள்ள ரப்பர் தோட்டத்திற்குச் சென்று, அங்குதான் அவன் விஷத்தை குடித்திருக்கிறான். கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்ட எஸ்.பிரவின், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துவாங்கு ஜாபார் மருத்து வமனையில் மரணமடைந்தான்.பசை நுகர்ந்ததற்காக சக மாணவர்களை கடிந்துகொண்ட காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து தன்னை மடக்கி ஏதோ திரவத்தை தன் வாய்க்குள் வலுக்கட்டாயமாக ஊற்றியதாக பிரவின் மரணப்படுக்கையில் இருந்த போது தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். தனது முன்னாள் பள்ளிக்கூடத்தில் பழைய நண்பர்களைச் சந்தித்தப் பிறகு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img