செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

இந்து சமயத்தை இழிவுபடுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
வெள்ளி 05 மே 2017 11:55:37

img

(கோலாலம்பூர்) இஸ்லாமிய மதப் போதகர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் பலர் இந்து சமயத்தையும் மலேசிய இந்திய சமுதாயத்தையும் அடிக்கடி இழிவாகப் பேசிவருவது ஒரு தொடர்கதைதானா? அவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? இதனை கண்டிக்கும் வகையில் நாளை சனிக் கிழமை நாடு தழுவிய நிலையில் ஒரே நேரத்தில் அரசு சார்பற்ற இயக்கங்கள் போலீஸ் புகார்களை செய்வதற்கு உறுதி பூண்டுள்ளன. இந்து சமயத்தை இழிவுபடுத்தி வரும் இந்தியாவைச் சேர்ந்த ஸாஹிர் நாயக், இந்திய சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ள பெர்லிஸ் மாநில முப்தி, இன்னும் சிலரின் செயல்களை வன்மையாக கண்டித்த அரசு சாரா இயக்கங்கள், இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். போலீசில் புகார் அளிப்பது, அமைதி ஊர்வலம் அல்லது பேரணி நடத்துவது, பிரதமரிடமும் மாமன்னரிடமும் கோரிக்கை மனு வழங்குவது மற்றும் பொது மக்களிடையே இந்திய சமுதாயத்தைப் பற்றியும் இந்து சமயத்தைப் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துவது எனப் பலவித ஆலோசனைகளைப் பலர் முன்வைத்தனர். நேற்று முன்தினம் தலைநகரில் ஹிண்ட்ராப் முன்னெடுத்த கலந்துரையாடல் தன்மையிலான ஓர் ஆலோசனை கூட்டத்தில் அரசு இயக்கங்கள் இந்த கருத்துகளை முன்வைத்தன. இந்தக் கூட்டத்தில் சுமார் 20 அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் கலந்து கொண்டன. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. இயக்கத் தலை வர்களின் பல ஆலோசனைகளை ஆதரித்துப் பேசிய ஹிண்ட்ராஃபின் தலைவர் பொன். வேதமூர்த்தி, முதல் கட்ட நடவடிக்கையாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று பலரையும் கோரினார். மலேசியா முழுவதும் பல அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் ஒரே நாளில் கூட்டம் கூட்டமாக போலீஸ் புகார் அளிக்க வேண்டும். நம்முடைய சமு தாயம் முதலில் தைரியமாக ஒன்று சேரவேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், இதுபோன்ற இழிசெயல்களை எதிர்கொள்வது சுலபம்’ என்று வேதமூர்த்தி கூறினார். நாளை மே 6 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நாடுதழுவிய நிலையில் போலீஸ் புகார்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஹிண்ட்ராஃப் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான் அறிவித்தார். இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதங்களைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ‘பெர்சத்துவான் ராபாட்’ இயக்கத்தின் செயலாளர் கண்ணன் விவரித்தார். இந்து சமயத்தை இழித்துரைக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஒரு கவிதையை பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி அபிடின் பதி விறக்கம் செய்து இருந்தார். அதேபோன்று ஒரு காணொளியில் இந்தியாவில் இந்தியர்கள் தாழ்ந்த சாதியினர், அவமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால், அவர்கள் பிரிட்டிஷாரால் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு உரிமைகளை கோரினர் என்று அஸ்ரி கூறியுள்ளார். இந்தியர்கள் மலேசியாவில் அனுபவிக்கும் வாழ்க்கை அவர்களின் மூல நாட்டில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு மேலானது என்றும் தெரிவித்து இருந்தார். அவரின் பேச்சை 40 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். அவரின் பேச்சு தேச நிந்தனை தன்மையில் அமைந்துள்ளது என்று சாடினர்.. முப்தி என்ற முறையில் முகமட் அஸ்ரி மற்ற சமயங்களை அவமதிக்கக்கூடாது. அரசாங்கம் அந்த முப்தியை உடனடியாக அவரது பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். முப்தி மாநிலத்தின் மிக உயர்ந்த பதவி. அவர் சுல்தானுக்கும் மாநில அரசுக்கும் சமய விவகாரங் களில் ஆலோசனை கூறுபவர். மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து கொண்டு மற்ற சமயங்களையும் மற்ற சம்பிரதாயங்களையும் சிறுமைப்படுத்தி பேசும் ஒருவரை இந்துக்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். எனினும் இது குறித்து விளக்கம் அளித்த முப்தி முகமட் அஸ்ரி சர்ச்சைக்குரிய தனது அந்த கவிதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்துக்களைப் பற்றி அல்ல என்றார். சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக் இந்து சமயத்திற்கு எதிரான தனது சொற்பொழிவுகளை நடத்தியிருக்கும் வேளையில் அவருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பது மலேசிய இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பில் இந்தியாவினால் தேடப் பட்டு வரும் ஸாஹிர் நாயக், அவரின் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர்கள் கோரி வருகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img