புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

கொடநாடு காவலாளி கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்
புதன் 03 மே 2017 18:28:08

img

கொடநாடு கொலை வழக்கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.முரளி ரம்பா, 'சயன் தற்போது சுயநினைவுடன் உள்ளார். சயனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக சயனிடம் விசாரணை தொடரும். கூடிய விரைவில் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரும் கைது செய்யப்படுவர்' என்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மேலும் அவரின் நண்பர் சயன், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் காயமடைந்த சயனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நாக்கை அறுப்போம் என்று மிரட்டிய அமைச்சரை நீக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

தஞ்சாவூரில் அமைச்சர் துரைக்கண்ணு

மேலும்
img
சிறையில் திருமுருகன் காந்தி, முகிலனுக்கு தொடரும் மனித உரிமை மீறல்!

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்

மேலும்
img
`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன

மேலும்
img
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை

மேலும்
img
`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img