செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

கேப்டனின் உடல்நிலையைப் பற்றி யாராவது கேள்வியெழுப்பினால், கன்னத்திலேயே அறையுங்கள்
செவ்வாய் 02 மே 2017 08:02:53

img

பல மாதங்களுக்குப் பிறகு, இன்று மேடையில் தோன்றி, தற்போது ஊசலாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் நடப்பு அரசியலை, தன் சிம்மக் குரலால் தோலுரிப்பார் என எதிர்பார்த்து வந்த தே.மு.தி.க-வின் தொண்டர்களுக்கு, திருப்பூரில் கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்! சோர்வுற்றுக் கிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்த, தே.மு.தி.க-வின் பலத்தை அதிகரிக்க, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், இன்று தே.மு.தி.க சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டங்கள்தோறும் சென்று தொண்டர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென சில மாதங்கள் மருத்துவ ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசி கலாவின் அட்டூழியம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகளின் ஆர்பாட்டம் என லைம் லைட்டில் இருந்த தமிழ்நாட்டின் சென்சிட்டிவ் வான சம்பவங்கள் எதைப் பற்றியும் பெரியதாக எங்குமே பேசாமல், குறிப்பாக மீடியாவின் கண்களில் படாமலேயே சில காலம் அமைதியாய் இருந்த தங்கள் கட்சித் தலைவன், மீண்டும் பழைய உற்சாகத்தோடு இன்று மே தினப் பேருரை ஆற்றுவார் எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண் டர் படை வந்து குவிந்திருந்தது. அதற்கு அச்சாரம் போடும் வகையில்தான் தன் பேச்சின்மூலம் பிரேமலதாவும் எக்கச்சக்கப் பில்டப்களை அள்ளி வீசினார். 'பல்வேறு மாவட்ட மக்கள் வாழும் ஊர் என்பதாலும், தொழிலாளர் வர்க்கம் நிறைந்த ஊர் என்பதாலும்தான் இந்த மாவட்டத்தை மே தினப் பொதுக் கூட்டம் நடத்துவதற்காகத் தேர்ந்தெடுத்தோம். இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக, சாமளாபுரத்தில் வீதியில் இறங்கிப் போராடிய வீரமங்கைகள் வாழும் ஊர் இது. என்னைக்கூட, டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட் டத்தில் ஏன் மண்சோறு சாப்பிட்டீர்கள்? எனப் பலரும் கேட்டார்கள். கோயிலில்தான் எல்லாரும் மண் சோறு சாப்பிடுவார்கள். என்னைப் பொறுத் தவரை விவசாயிகள் போராட்டம் நடத்திய அந்த ஜந்தர் மந்தர் பகுதிதான் கோயில். எனவேதான், அங்கு மண் சோறு சாப்பிட்டேன். எதற்கு இந்த வய தில் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள், உங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். அடுத்தநாள், எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தபின் அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டார்கள். ஆனால், இங்கு ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திவிட்டேன்; பந்த் நடத்திவிட்டேன்; போராட்டம் மாபெரும் வெற்றி என, கூசாமல் கத்திக்கொண்டு இருக்கிறார். சட்டசபையில், சட்டையைக் கழற்றிவிட்டு அவர் நடத்திய நாடகத்தை இந்த நாடே பார்த்துச் சிரித்தது. அ.தி.மு.க-வும் அதற்கு விதிவிலக்கல்ல. சர்.சி.வி ராமனும், அப்துல் கலாமும் வாழ்ந்த இந்த பூமியில், தெர்மக்கோலை வைத்து நீர் ஆவியாவதைத் தடுக்க நினைக்கும் கோமாளிகளை நாம் அ.தி.மு.வில் மட்டுமே பார்க்க முடியும். ஜெயலலிதாவின் வாழ்க்கையே ஒரு மர்மமாகத்தான் இருந்து முடிந்திருக்கிறது. இன்று, அவர் வீட்டுக் காவலாளி முதல் கார் டிரைவர் வரை மர்மமாக இறந்துகிடக்கிறார்கள். ஜெயலலிதாவின் உடலை அந்தச் சமாதியிலிருந்து எடுத்து, போயஸ்கார்டன் வீட்டிலேயே வைத்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு ஊழல் குற்றவாளியாகத்தான் மரணித்திருக்கிறார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியமைக்க, இந்த கொங்கு மண்டலம் தான் முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், நீங்கள் குடித்து வளர்ந்த சிறுவாணியும் நொய்யலும் இப்போது எப்படிப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கிறது... இந்த ஆளும் அரசாங்கம் உங்களின் நீராதாரத்தை மீட்டெடுக்க ஏதாவது முயற்சி எடுத்ததா? எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடே பாலைவனமாகப்போகிறது என்று. இன்னும் கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். விவசாயிகள் தற்கொலையும், வீதியில் இறங்கிப் போராடும் மக்களையும் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது. 2011 தேர்தலோடு தி.மு.க-வுக்கு மக்கள் நிரந்தர முடிவுகட்டிவிட்டார்கள். 2016 தேர்தலோடு அ.தி.மு.க-வும் முடிவுகட்டப்பட்டுவிட்டது. இனி வரும் காலத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டிய கடமை தே.மு.தி.க-வுக்கு மட்டுமே இருக்கிறது' என்று பிரேமலதா பேசிக்கொண்டிருக்கும்போதே, விஜ யகாந்த் மேடையேறி இருக்கையில் அமர, ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றியோ, கருணாநிதியின் உடல்நிலையைப் பற் றியோ கேட்க தைரியமில்லாதவர்கள், கேப்டனின் உடல்நிலையைப் பற்றி மட்டும் கேட்கிறார்கள். 'இப்போது தொண்டர்களிடத்தில் நான் ஒரு முக்கியக் கோரிக்கை வைக்கிறேன். இனி யாராவது உங்களிடத்தில் விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது எனக் கேட்டால், அவர்களுடைய கன்னத்திலேயே பளாரென ஒரு அறை விடுங்கள். நம்முடைய கேப்டன் 100% சிறப்பாக, சூப்பராக, ஃபிட் டாக சிங்கம்போல வந்து இங்கு அமர்ந்துகொண்டிருக்கிறார் என பிரேமலதா பில்டப் கொடுக்க, பல மாதங்களுக்குப் பிறகு மைக் பிடிக்கும் விஜயகாந்தின் பேச்சைக் கேட்க ஆர்வமானார்கள் தொண்டர்கள். மே தின வாழ்த்துகள் இல்லை. தொழிலாளர் தின வாழ்த்துகள்தான் சொல்வேன் என ஆரம்பித்தவர், '8 மணி நேர வேலை எப்போது வந்தது தெரியுமா? 1986-ல். அந்த அளவுக்கு கஷ்டப்பட்டது தொழிலாளர் வர்க்கம். அரிசி ஆலையில்தான் நான் என் வாழ்க்கையைத் துவக்கினேன். அன்று முதல் நான் எங்கு சென்றாலும் தொழிலாளர்களோடுதான் இருக்கிறேன்' என்று பேசிக்கொண்டிருக்க, திடீரென கூட்டத்திலிருந்து ஒருவர், 'கேப்டன், அழாதீங்க என்று கத்தினார்'. 'நான் பேசும்போது என் கண்களில் நீர் வடியும் என்பது அனைவருக்குமே தெரியும். இந்தத் தொழிலாளர்களுக்காகத்தான் அழுகிறேன் என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள். 'லோக்பால், லோக் ஆயுக்தா' என்று ஸ்டாலின் பேசுகிறார். அது வந்தால் அவரும், அவரின் குடும்பமும்தான் சின் னாபின்னமாகும். மின்சாரத்துறை இன்று மின் மயானத் துறை ஆகிவிட்டது' என்று பேசிக்கொண்டிருந்தவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட் டென, சத்தம் வந்துட்டே இருக்கு. நான் என்ன பேசுறேன்னு எனக்கே தெரியமாட்டேங்குது. அதனால, எல்லோருக்கும் வணக்கம் சொல்லி கையைக் காட் டிட்டா நான் உக்காந்துருவேன்.' என சட்டென பேச்சை முடித்துவிட்டு, நான்கு பேருக்கு சேலை துணிமணிகளை வழங்கிவிட்டுக் கிளம்பினார் விஜயகாந்த். அடுத்த ஐந்து நிமிடத்தில், ஒட்டுமொத்த கூட்டமும் கலைந்து, பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் என்றே தெரியாத அளவுக்கு ஆள் அரவமின்றிக் காணப் பட, அங்கு பூட்டியிருந்த கடையின் வாசலில், கட்சித் தொண்டர் ஒருவர் தனியாக அமர்ந்திருந்தார். ஏன் இன்னும் கிளம்பவில்லையா என்று நாம் அவ ரிடம் கேட்க,' உங்க தலைவனுக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருக்காராமே... இனி உங்க கட்சியே காணாமப் போயிரும்ன்னு ஊர்ல சில மாசமா பேசிட்டு இருக்கிறவங்களுக்கு முன்னாடி, கெத்தா காலரைத் தூக்கிவிட்டுட்டு, புதுக்கோட்டைல இருந்து கெளம்பி வந்தேன். நம்ம கேப்டன் இத் தனை மாசம் கழிச்சுப் பேசப்போறார், இனி அரசியல் வட்டாரத்தையே அமர்க்களப்படுத்துவார்னு நம்பிக்கையோட வந்தேன். இப்பிடி திடுதிப்புனு பாதியில பேச்ச நிறுத்திட்டுப்போயிட்டாரே. இப்படியெல்லாம் இருந்தா அப்புற எப்படி ஆட்சிக்கு வர்றது. தமிழ்நாட்டோட தவிர்க்க முடியாத சக்தியா இருப்பாருனு நெனச்சோம். இப்புடி தொண் டர்களைத் தவிக்க விடுவார்னு நினைக்கல. எனக்கு ஊருக்குப் போக இனி காலைல தாம்யா பஸ் கிடைக்கும். இங்கன எங்கயாவது படுத்து எந்திருச்சி போயிக்கிவேன். நீங்க கெளம்புங்க' என்றார் அந்த உண்மைத் தோடர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கடன் பிரச்சனை... பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும்

மேலும்
img
‘கமலைவிட ரஜினி என்ன செய்திருக்கிறார்’- சீமான் கண்டனம்

இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும்

மேலும்
img
கூட்டணி கட்சிகளை கழட்டி விட அதிமுக முடிவு?

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை

மேலும்
img
இளைஞர்களின் தீவிரவாத சிந்தனை பரவல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...

நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல்

மேலும்
img
சட்டப்பேரவை தேர்தல்: பாஜக -வின் அடுத்த அதிரடி திட்டம் ரெடி...

மக்களவை தேர்தலில் பாஜக நடத்திய மிகப்பெரிய

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img