புதன் 14, நவம்பர் 2018  
img
img

அண்டை நாடுகளுக்கு பரிசு அறிவித்தார் பிரதமர் மோடி!
திங்கள் 01 மே 2017 17:11:28

img

அண்டை நாடுகளுக்கான பரிசாக இந்தியா ‘ஜிசாட்-9’ மே-5ம் தேதி விண்ணில் செலுத்த காத்திருக்கிறது. இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடனான உறவினை மேம்படுத்திக்கொள்ள இந்த செயற்கைகோள் உதவும் என நம்பப்படுகிறது. இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற ஒரு வாரத்திலேயே அண்டை நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ‘சார்க் செயற்கைக்கோள்’ தயார் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான் விலகிக்கொள்ள தற்போது ’தெற்காசியா செயற்கைக்கோள்’ எனப் பெயரிடப்பட்டு வருகிற மே 5-ம் தேதில் விண்ணில் பாய்கிறது. இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளில் பெரும் பயனளிக்கும் விதமாக 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இஸ்ரோவில் தயாரிக்கப்பட்டது தான் ‘ஜிசாட் 9’. இதுதொடர்பாக மோடி நேற்று தன்னுடைய வானொலி நிகழ்ச்சியான ‘மான் கீ பாத்’-ல் இந்தியாவின் திட்டங்கள் அண்டை நாடுகளுக்கும் எவ்வாறு பயனளிக்கப் போகிறது என்பது குறித்து விரிவுரை ஆற்றினார். இத்திட்டத்தில் நேபாள், பூட்டான், வங்கதேசம், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஒத் துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தான் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் இந்தத் திட்டத்தில் இருப்பது குறித்து இந்தியா யோசித்து வந்தது. அதே சமயத்தில் பாகிஸ்தானும் தங்களிடமே செயற்கைகோள்கள் இருக் கின்றன எனக் கூறி திட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் ‘ஜிசாட்’ பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img