வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

எங்களுக்கு மாற்று நிலம் வேண்டும்!
திங்கள் 01 மே 2017 12:44:08

img

முப்பது ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் எங்கள் நிலங்களை பறிமுதல் செய்யும் அரசாங்கம் , எங்கள் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு ஓர் ஏக்கருக்கு வெ.40,000 என இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் இங்குள்ள ஜோஹான் செத்தியா விவசாய நிலப்பகுதியைச் சேர்ந்த சுமார் 120 விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவ்விவசாயிகள் நேற்று இங்கு மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத்தலைவரும் கம்போங் ஜோஹான் செத்தியாவில் விவசாயம் புரிந்து வருபவருமான பி.டி.சிவகாந்தன் இது குறித்து செய்தியாளர்களிடம் கீழ்க்கண்ட வகையில் விளக்கமளித் தார்: 1974-ஆம் ஆண்டு பச்சை பசுமைத் திட்டத்தின் கீழ் 4,500 ஏக்கர் மலேசியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலங்களில் சுமார் 25 ஆண்டுகளாக எவரும் பயிர் செய்யாத காரணத்தால் கிள்ளான் விவசாய இலாகா மூவினத்தைச் சேர்ந்த 120 பேரை தேர்வு செய்து 250 ஏக்கர் நிலத்தை பகிர்ந்தளித்ததுடன் அங்கு விவசாயத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் பச்சை காடுகளைக்கொண்ட நிலங்களை பலநூறு வெள்ளிகளை செலவிட்டு சீர்படுத்தி அவர்கள் பயிரிட்டு வந்தனர். இங்கு பெரிய அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் எங்களின் காய்கறிகள் யாவும் கிள்ளான் உட்பட சிலாங்கூர் மாநிலத்தில் பல பிரசித்திபெற்ற பேரங்காடிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு விவசாயம் செய்துவரும் 120 பேரில் 22 பேரின் நிலங்களை எம்.ஆர்.டி ரயில் சேவைக்காக மீட்டுக்கொண்டுள்ள மத்திய அரசாங் கத்தின் திடீர் நடவடிக்கையினால் பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நாங்கள் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் இறங்கினோம். மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்திற்கு நாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இல்லை. எங்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடமும் மாநில மந்திரி புசாரிடமும் கடிதம் வழி கோரியிருந்தோம். எங்களின் விண்ணப்பத்திற்கு இன்றுவரை எவ்வித பதிலும் இல்லை என்பது ஒரு புறமிருக்க இங்கு எம்.ஆர்.டி. ரயில் சேவை திட்டத்திற்கான குத் தகையை எடுத்திருக்கும் பிரசரானா என்ற நிறுவனம் எங்களை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இதுவரை அழைக்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தையே நம்பி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த எங்களுக்கு தற்போது பொருளீட்டுவதற்கு வேறு வழி இல்லாததால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண இதில் தலையிட வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள 22 விவசாயிகளுக்கு மாற்று நிலம் வழங்குவதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் நிலங்கள் இல்லையென மாநில அரசு கை விரித்துள்ள நிலையில் இங்கு பயிர் செய்து வந்த விவசாயிகளின் தலா ஒரு ஏக்கர் நிலத்திற்கு வெ.40 ஆயிரம் என கணக்கிட்டு இழப்பீட்டு நிதியினை அரசாங்கம் வழங்குவதன் மூலமாக அத்தொகையினைக் கொண்டு தாங்களாகவே மாற்று நிலங்களை தேடிக்கொள்வதுடன் அவற்றில் விவசாயம் செய்வதற்கு இந்த இழப்பீட்டுத்தொகை பேருதவியாக இருக்கும் என பி.டி.சிவகாந்தன் நேற்று நடைபெற்ற மறியலின்போது தெரிவித்தார். தொழிலாளர் தினமான இன்று எங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு பிரதமர் ஏற்றதொரு முடிவினைக் காண்பார் என தாங்கள் பெரிதும் நம்புவதாக நிலங்களை இழந்து தவித்துவரும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img