செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பி.கே.ஆர்-பாஸ் உறவு முறிந்தது
திங்கள் 01 மே 2017 12:42:38

img

பி.கே.ஆர் உடனான தனது அரசியல் தொடர்புகளை பாஸ் கட்சி துண்டித்துக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற பாஸ் கட்சியின் 63-ஆவது பேராளர் மாநாட்டில் இது சம்பந்தமான தீர்மானத்தை அது நிறைவேற்றியது. கட்சியின் 21 தொகுதிகள், டேவான் உலாமா, பாஸ் இளைஞர் அணி ஆகியன கூட்டாக பரிந்துரைத்த அத்தீர்மானம் அதிகப் பெரும்பான்மையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அனைத்து பி.கே.ஆர். தொகுதிகளிலும் பாஸ் அதன் வேட்பாளரை நிறுத்துவதற்கு அனுமதி கோரி பாஸ் தலைமைத்துவத்தை வலி யுறுத்திய தீர்மானம் ஒன்றும் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலுக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவித புரிந்துணர்வும் காணப்படவில்லையெனில் இத்தீர்மானம் அனைத்து நிலையிலும் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2013 பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் 99 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 172 சட்டமன்றத் தொகுதிகளிலும் பி.கே.ஆர் போட்டியிட்டது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளிப்பதாக மலாக்கா பாஸ் டேவான் உலாமா தலைவர் சுல்கிப்ளிஇஸ்மாயில் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img