செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பிரதிந்திகள் தேவையில்லை.
திங்கள் 01 மே 2017 12:16:58

img

(கேரித்தீவு) கேரித்தீவு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கிராமத்தில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு மோசமான சூழலில் இன்று வாழ்ந்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றிய 2008-ஆம் ஆண்டு முதல் கேட்பாரற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக அம்மக்கள் தெரிவித்தனர். ம.இ.கா முன்னாள் தேசியத்தலைவரும் கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் முயற்சியில், கேரித்தீவில் வாழ்ந்து வந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு 44 ஆண்டுகளுக்கு முன்பு அரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடுகளைக் கட்டி குடியேறிய ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள்தான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு எதிராக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சியினர் ஆட்சிப்புரிய தொடங்கிய 2008- ஆம் ஆண்டு முதல் அடிப்படை வசதிகள் எதையும் செய்து கொடுக்காததால் இங்குள்ள கால்வாய்கள், சாலைகள், சாலை விளக்குகள் யாவும் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மலேசிய நண்பனிடம் புகார் தெரிவித்தனர். அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்குடியிருப்பாளர்கள், மாநில அரசாங்கம் தங்கள் கிராமத்தின் வளர்ச்சியில் சற்றும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என முறையிட்டனர். இது குறித்து நண்பனிடம் விளக்கமளித்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கிராம மக்கள் நல சங்கத்தின் தலைவர் சு.சுப்பிரமணியம், ஐந்து வரிசை குடியிருப்பு களைக் கொண்ட இக்கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருப்பதுடன் அதன் அருகிலுள்ள கால்வாயிகள் தூர் வாராததால் கழிவு மற்றும் மழைநீர் வெளியேற முடியாத அளவிற்கு காடு மண்டிக் கிடக்கிறது என்று சுட்டிக்காட்டினார். மேலும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சாலையில் மின் விளக்குகள் பொறுத்தப்படவில்லை. இக்கிராமப் பகுதியை ஒட்டியுள்ள கேரித்தீவின் பிரதான சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மின் விளக்குகளுடன் வேகக்கட்டுப்பாட்டு மேடுகளை நிர்மாணிக்கும்படி கடந்த ஆண்டு கோலா லங் காட் மாவட்ட பொதுப்பணி இலாகா, சிஜங்காங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ யுனூஸ் ஆகியோரிடம் தாம் விண்ணப்பித்து இருந்ததாக கூறினார். எனினும், ஓராண்டு கடந்தும் தங்கள் விண்ணப்பம் கிணற்றில் போட்ட கல் போன்ற கதையாக இருந்து வருகிறது. சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன் னணி ஆட்சிபுரிந்த காலக்கட்டத்தில் அன்று சிஜங்காங் தொகுதியின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்துவந்த டத்தோ அப்துல் ஃபாத்தா இஸ்கண்டாரின் மூலமாக 2006-ஆம் ஆண்டு இங்குள்ள ஐந்து வரிசையைக்கொண்ட சாலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இன்று வரை எவ்வித நட வடிக்கையும் இல்லை.தேர்தல் நெருங்கும் காலத்தில் மட்டும் எங்களை நாடும் வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றால் வானத்தை வில்லாக வளைத்து உங்கள் கைகளில் தவழவிடுகிறோம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளை மட்டும் கூறிச் செல்கின்றனர். ஆனால் வெற்றி பெற்றதும் எங்களை எட்டிப்பார்ப்பது இல்லை, அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை என இக்கிராம மக்கள் குறைபட்டுக்கொள் கின்றனர். எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத மக்கள், பிரதிநிதிகள் இனி எங்களுக்குத் தேவையில்லை என குறிப்பிட்ட மக்கள் பொட்டலங்களை கொடுத்து எங்களை வாங்கிவிடலாம் என இனி கனவு காணாமல் எங்களின் கோரிக்கைகள் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவேண்டு மென சூளுரைத்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img