சனி 16, பிப்ரவரி 2019  
img
img

தேசிய விருது வென்ற சுட்டி ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
ஞாயிறு 30 ஏப்ரல் 2017 13:37:28

img

குஞ்சு தெய்வம் என்ற மலையாளப் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுட்டி ஸ்டார் ஆதிஷ் பிரவீன். இந்தப் படத்துக்காக, அண்மையில் அவருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மலையாள சினிமாவில் நடித்தாலும், ஆதிஷ் பக்கா விஜய் வெறியர். தேசிய விருது வழங்கப்பட்ட பிறகு கூட, இந்த விருதை விட, நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று ஆதிஷ் தெரிவித்தார். இதையடுத்து, ஆதிஷ் குறித்து, விஜய்யின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.இந்நிலையில், விஜய் தனது ஈ.சி.ஆர் கெஸ்ட் ஹவுஸ்க்கு ஆதிஷை வரவழைத்துள்ளார். நேற்று நடந்த இந்த சந்திப்பின் போது, இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடியுள்ளனர். மேலும், செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். தேசிய விருதுகளைப் போல மேலும் பல விருதுகள் பெற சுட்டி ஸ்டாருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் ஆதிஷ், தற்போது செம ஹேப்பியாம். இந்த சந்திப்பின் போது, ஆதிஷின் தாய் மற்றும் கேரள மாநில விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
img
நம்மக்கிட்ட கூட்டணி கட்சியா? அதான் மக்களுக்கே தெரிஞ்சிப்போச்சே

முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக

மேலும்
img
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img