ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

அடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான்!
சனி 29 ஏப்ரல் 2017 18:32:31

img

திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவை, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட் டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். விழாவுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமைதாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத் துறை அமைச்சர் வளர்மதி, வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'விளை யாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு 10,000 ரூபாய் டெபாசிட் செய்யும் திட்டம்குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம். ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துவருகிறது. எனவே, அங்கு ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வருவதுகுறித்து பரி சீலனைசெய்துவருகிறோம். இதுதொடர்பாக, பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த, குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது. தமிழகத்தில், அடுத்த 50 ஆண்டுகளுக்கும் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கும்' என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img