ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

ரூ.240 கோடி வசூல் செய்து ‘பாகுபலி-2’ படைத்த புதிய சாதனை
சனி 29 ஏப்ரல் 2017 17:41:15

img

நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடித்த ’பாகுபலி-2’ படம் உலகம் முழுவதும் வெளியானது. இது பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆன் லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். வெள்ளிக்கிழமை படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. உலகம் முழுவதும் வெளியானாலும் ஆந்திராவில் பிரபாஸ், ராணா ரசிகர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தனர். சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் நடித்ததால் தமிழ்நாட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் கதாநாயகன் பிரபாஸ் என்றாலும் சத்யராஜ் படம் போல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடம் பெற்றுள்ளார். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் ’கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்’ என்பதற்கு ‘பாகுபலி 2’இல் விடை கிடைக்கும் என படம் முடிவடைந்ததால் 2ஆம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வெளிநாடுகளுக்கு இணையான ’கிராபிக்ஸ்’ தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் 2 ஆண்டுகளாக படம் தயாரிப்பில் இருந்தது. இதனால் ரசிகர்கள் 2 வருடம் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஆங்கில படம் பார்ப்பது போன்ற பிரம் மையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் ஆனது. முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்து இருப் பதாக தகவல் வெளியாகியுள்ளது.‘பாகுபலி-2’ படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு வசூலாகி உள்ளது. இவை அனைத்துமே ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனையான டிக்கெட் வசூல் ஆகும். ஆன்லைனில் முதல்நாளில் ஒரு வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்நாளில் ரூ.13 கோடி வசூலாகி உள்ளது. கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி முதல்நாளில் ரூ.5 கோடி வசூலித்து கொடுத்துள்ளது. மலையாளம் அல்லாத பிற மொழிப்படம் கேரளாவில் ஒரே நாளில் ரூ.5 கோடி வசூலித்து இருப்பது புதிய சாதனையாகும். ஆந்திராவில் ‘பாகுபலி-2’ படம் பார்க்க காலை 6 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஐதராபாத்தில் ஆன்லைன் முன்புதிவு தொடங்கியதும் ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் 1000 தியேட்டர்களில் ‘பாகுபலி’ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை வசூலானது. கர்நாடகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. பெங்களூரில் 95 சதவீத தியேட்டர்களில் ‘பாகுபலி-2’ படம் ஓடியது. இங்கு தெலுங்கு மொழியில் படம் வெளியானது. பெங்களூர், மும்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.1000, ரூ.1,500, ரூ.2,000 என ரகசியமாக விற்கப்பட்டது. வெளிநாடுகளில் 1000 தியேட்டர்களில் ‘பாகுபலி-2’ படம் ரிலீஸ் ஆனது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாளில் மொத்தம் ரூ.240 கோடி வரை முன்பதிவு மூலம் வசூலாகி உள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img