செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

வெ.4,500 மலேசிய அடையாள அட்டை வெளிநாட்டவருக்கு விற்பனை!
சனி 29 ஏப்ரல் 2017 16:28:38

img

வெளிநாட்டவர்களிடம் மலேசிய அடையாள அட்டை விற்கப்படும் விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.மலாக்காவில் ஒரு கும்பல் வெ.4,500லிருந்து வெ.10,000 வரையில் போலி அடையாள அட்டைகள் வெளிநாட்டவர்களிடம் விற்பதாகக் அறியப்படுகிறது. தேசிய பதிவு இலாகாவில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றியதாகக் கூறிக்கொள்ளும் நபர்தான் இதன் பின்னணியில் உள்ளது என்பது தி ஸ்டார் நாளிதழ் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை யின் வழி தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தேசிய பதிவு இலாகாவில் பணியாற்றும் காலத்திலும் அதிகமான இந்தோனேசியர்களுக் கும் கம்போடியர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க குறிப்பிட்ட அந்த நபர் உதவி செய்துள்ளார். இந்த இரகசிய நடவடிக்கையில் தி ஸ்டார் நாளிதழின் நிருபர் போலி அடையாள அட் டைக்கு விண்ணப்பம் செய்பவர் போல வேட மிட்டு பெர்பாக் சமூக அமைப்பைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியுள்ளார்.கடந்த 2000ஆம் ஆண்டில் ஜொகூரைச் சேர்ந்த 17 வயது மாணவனுக்கு ஓர் ஏஜெண்ட் மூலமாகப் போலி பிறப்புப் பத்திரத்தை வழங்கி யதைப் பெர்பாக் வெளிப்படுத்தியது. அந்த மாணவன் போலி பிறப்புப் பத்திரத்தைக் கொண்டு கடந்த 2011ஆம் ஆண்டில் கடப்பி தழையும் பெற்றுக்கொண்டு இந்தோனேசியா விற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். இருப் பினும், அவரின் அடையாள அட்டை விண்ணப் பத்தை 2012ஆம் ஆண்டு தேசிய பதிவிலாகா இரத்து செய்தது. அவரின் பிறப்புப் பத்திரத்தில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர் மீது குற்றமும் சுமத்தப்பட்டது. பல வெளிநாட்டினர் மலேசிய குடியுரிமையை வெ.5,000லிருந்து வெ.10,000 வரையில் வாங்கியுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன் எனவும்அவ்வாறு வாங்க முயற்சித்த சில இந்தோனேசியர்களைத் தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் பெர்பாக் தலைவர் முகமட் கைரூல் ஹபிக் தெரிவித்தார். சட்டத்திற்குப் புறம்பாகக் குடியுரிமை பெற முனைந்த சில இந்தோனேசியர்களைப் பின்பற்றி குறிப்பிட்ட அந்த நிருபர் சம்பந்தப்பட்ட ஏஜெண்டை நெருங்கி உள்ளார். குடியுரிமை பெற ஆர்வ முள்ளவராகத் தன்னை வெளிப் படுத்திக்கொண்டு இதற்குப் பின்னணியில் உள்ளவரின் தொலைபேசி எண்ணையும் ஏஜெண்டிடமிருந்து பெற்றுள் ளார்.இதன் பிறகு, அந்த நிருபர் அவரிடம் தொலைபேசி மூல மாகப் பேசியுள்ளார். தேசிய பதிவிலாகாவில் பணியாற் றும்போது அசல் குடியுரிமை ஆவணங்களைச் சட்டத்திற்குப் புறம்பாகப் பல இந்தோனேசியர் களுக்கும் கம்போடியர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் குடி யுரிமை விண்ணப்பம் செய்ய வெ.4,500ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனவும் தனக்கு இன்னும் பல வாடிக் கையாளர்களைச் சேர்த்தால் சிறப்புக் கழிவு வழங்குவதாக வும் அவர் கூறியுள்ளார். அவரு டனான தொலைபேசி உரையா டல் பதிவும் செய்யப்பட்டுள் ளது. இதனிடையே, கோத்தா கினபாலுவில் மலேசியர்க ளுக்கு அடையாள அட்டை பெற உதவ வெ.2,000 கேட்ட தற்காக தேசிய பதிவு இலா காவைச் சேர்ந்த இரு பணி யாளர்கள் மலேசிய ஊழல் தடு ப்பு ஆணையத்தால் கைது செய் யப்பட்டு 5 நாட்களுக்குத் தடுப் புக் காவலில் வைக்கப்பட் டுள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img