ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

செரண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி அதிரடியாக நிறுத்தம்
சனி 29 ஏப்ரல் 2017 14:56:59

img

செரண்டாவில் புதிய தமிழ்ப் பள்ளியினைக் கட்டுவதற்கு அதற்கான நில, சாலை மற்றும் நீர்ப்பாசன திட்ட வரைபடங்களை குத்தகையாளரோ அல்லது ஆலோசகரோ இதுவரை மாவட்ட மன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்காததால் அதன் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு பணித்துள்ளதாக உலுசிலாங்கூர் மாவட்ட மன்ற கட்டடப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் துணை கல்வியமைச்சரும் உலுசிலாங்கூர் நாடாளு மன்ற உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன், செரண்டா தமிழ்ப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கு உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம்தான் முட்டுக் கட்டையாக இருப்பதாக டேசம் இணையத் தளத்தில் செய்தி வெளி யிட் டிருந்தார்., இதனைக் கேள்வியுற்ற கோலகுபுபாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ யோங், மாவட்ட மன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ விக்னேஷ், முரளி, கிராமத்து தலைவர்கள் கே.பாலச்சந்தர், சின்னையா, உதவியாளர் சுப்பையா ஆகியோருடன் மாவட்ட மன்ற தலைவருடன் ஒரு சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அச்சந்திப்பு நிகழ்வில் மாவட்ட மன்ற தலைவர் செரண்டா தமிழ்ப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கான உண்மையான காரணங்களை தெளிவு படுத்தினார். நேற்று முன் தினம் இணையத் தளத்தின் வழி மாவட்ட மன்றம் செய்தியாளர்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. மிஞாக் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் உரிமத்தைக் கொண்டு யு.எம்.டபள்யூ க்கு சொந்தமான நிலத்தில் செரண்டா புரோடுவா தொழிற்சாலை தாமான் மெலாதி மற்றும் டேசா கியாம்பாங் அருகே கல்வி அமைச்சு லாட் 16029ல் கட்ட திட்டமிட்டிருந்தது. கடந்த 18.6.2015ல் புதிய பள்ளியைக் கட்டுவதற்காக தொழிற்சாலை நிலத்தை மாற்றி பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்திருந்தது. அதன் பிறகு குத்தகையாளர் அல்லது ஆலோசகர் பள்ளிக்கான நில, சாலை மற்றும் நீர்ப்பாசன வரைபடங்களை மாவட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத் திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் குத்தகையாளர் நிலத்திலுள்ள மரங்களை அழித்து மேட்டுப் பகுதிகளை கரைத்து ஆரம்ப கட்ட வேலைகளை செய்யத் தொடங்கினர், நில வரை படங்களை அனுப்பாமல் வேலைகளைத் தொடங்கியதால் மாவட்ட மன்றம் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கடந்த 6.12.2016ல் குத்தகையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கு தங்கள் மீதுள்ள குறைகளை மறைப்பதற்கு மற்றவர்கள் மீது வீண் பழியை சுமத்துவது ஏற்புடைய செயலாகாது. எத்தனையோ பெரிய கட்டடங்களைக் கட்டி வரும் கல்வியமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட குத்தகையாளரோ அல்லது ஆலோசகரோ நில வரை படங்களை மாவட்ட மன்றத்தின் பார்வைக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை என சாந்திப்பின்போது கேள்வி எழுப்பினர். கடந்த ஆறு ஆண்டு காலமாக இழுபறியாக இருந்து வரும் செரண்டா தமிழ்ப் பள்ளியின் பிரச்சினைக்கு இப்பொழுது யார் காரணம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதால் இனியாவது விடிவு காலம் பிறக்குமா என்பதை பலரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img