ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

ஈப்போவில் பலத்த புயல்! 112 ஆண்டுகால அரசமரம் வேரோடு சாய்ந்தது!
சனி 29 ஏப்ரல் 2017 14:18:21

img

நேற்று கனத்த மழையுடன் வீசிய புயல் காற்றில் ஈப்போவில் மிக பிரபலமான ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சொந் தமான அரச மரத்து பிள்ளையார் கோவிலின் அரச மரம் வேரோடு சாய்ந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 112 ஆண்டு கால பழமையான கோவிலான அரச மரத்து பிள்ளையார் கோவில் அதிகமான பக்தர்களைக் கொண்ட கோவிலாகும். நேற்று மாலை 4.10 மணியளவில் ஈப்போ மாநகரை சுற்றி பலத்த புயல் காற்று வீசியது. சில நிமிடங்கள் நீடித்த புயல்காற்று பல்வேறு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத் தியது. சிலிபின் சாலையின் குறுக்கே பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர் டத்தோ நரான் சிங் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். புயல் சீற்றம் ஜாலான் லாகாட் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியது. இங்கு அருள்பாலித்து வரும் அரச மரத்து பிள்ளையார் கோவில் அரச மரம் வேரோடு பெயர்ந்து சாய்ந்தது. அரச மரத்துடன் சேர்ந்திருந்த பிள்ளையார் சிலை பாதிக்கப்படவில்லை. எனினும் கோவில் கூரைப் பகுதிகள் சேதமடைந்தன.அரச மரம் வேரோடு சாய்ந்தது குறித்து தகவல் காட்டுத் தீ போல் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் இதனை நேரில் காண்பதற்கு படையெடுத்து வந்தனர். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பு மூத்த முதல் கடவுள் பிள்ளையாரை வணங்குவோம். அரச மரத்து பிள்ளையார் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவில். 1905ஆம் ஆண்டு அரசு மரத்து பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டது. இதனை ஸ்ரீ தண் டாயுதபாணி ஆலய நிர்வாகம் சிறப்பாக நிர்வகித்து வந்தது. நேற்று வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை கவுன்சிலர் டத்தோ தங் கராஜா பார்வையிட்டார். ஆலய நிர்வாகத்தினருக்கு உதவ புந்தோங் சமூக நல அமைப்பின் தலைவர் செல்வராஜு அங்கு காணப்பட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img