செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

ஏழை இந்தியர்களுக்கான வெ.50 கோடி பி.என்.பி பங்குகள் டெலிகோம் பங்குகள் கதியாகி விடுமா?
சனி 29 ஏப்ரல் 2017 13:46:39

img

மலேசிய இந்திய சமூகத்தின் ஏழை மக்களுக்காக அரசாங்கத்தால் வெ.50 கோடி பி.என்.பி (PNB) பங்குகள் வழங்கப்பட்டிருப்பதை இந்நாட்டின் வர்த்தக சமூகத்தினர் வரவேற்றுள்ள போதிலும், அவை முறையாக ஏழை மக்களை சென்றடைவதற்கு எளிமையான, தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியர்களுக்கான பத்தாண்டு நீல பெருந்திட்டத்தை அறிவித்த போது பி40 எனும் பிரிவின் கீழான ஏழை இந்தியர்களுக்கு வெ.50 கோடி பி.என்.பி பங்குகளையும் அறிவித்தார். இந்நாட்டு இந்தியர்களுக்காக அரசாங்கம் ஏற்கெனவே வழங்கியிருந்த அமானா சாஹாம் வவாசான் (ஏ.எஸ்.டபள்யு 2020) மற்றும் டெலிகொம் பங்குகள் எல்லாம் இன்று வரலாறு சொல்லும் கதைகளாக மாறிவிட்ட நிலையில் இப்போது நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பையும் இந்த சமூகம் கோட்டை விட்டு விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் எண்ணம். பி.என்.பி. கீழான இந்த யூனிட் டிரஸ்ட் பங்குகளை அரசாங்கம் ஒதுக்கினாலும் இவற்றை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதில் இந்திய சமுதாயமாகிய நாம் பிரதமரிடம் என்ன கோர வேண்டும் என்றால், பி.என்.பி. இயக்குநர்கள் பொறுப்பில் முதலில் இந்தியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறுகிறார் மிக்கா எனும் மலேசிய இந்திய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சிவகுமார். அப்போதுதான் பங்குகள் உரியவர்களைச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியும். அதிலும், அரசியல் சார்ந்தவர்களாக யாரும் அந்த பதவி களில் அமர்த்தப்படாமல் முற்றிலும் நிறுவன பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவேகமான, சொத்துக்களை இரட்டிப் பாக்கும் வழிமுறைகள் தெரிந்த நிறுவன பிரதிநிதிகளே இங்கு தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இது இந்தியர்களின் சொத்துடமையை அதிகரிக்க உதவும், அதிகரிப்பையும் பிரதிபலிக்கும். ஆனால், இதில் உண்மையாக நாம் கவனிக்க வேண்டியது, பி.என்.பி நிர்வாக நிலையில் இந்தியர்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பதுதான் முக்கியம். இது பற்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் அவசியம். வெறும் பங்குகளை வாங்குவது மட்டும் நமது பங்காக இருக்க முடியாது. நிர்வாக மேல்மட்ட நிலையிலும் நமது பங்கேற்பு இருப்பது அவசியமாகும். பி.என்.பி. நிறைய திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது, செய்தும் வருகிறது. அவற்றில் எத்தனை விழுக்காடு இந்தியர்களுக்காக கொடுக்கப்பட் டுள்ளது? அல்லது எத்தனை விழுக்காட்டு இந்தியர்களை இவை சென்றடைந்துள்ளன? பி.என்.பி.யில் இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை விழுக்காடு என்பதும் இதுவரை யாருக்கும் தெரியாது. பி.என்.பி. பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்டிருந்தாலும், துன் அப்துல்லா படாவி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அதில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் திறக்கப்பட்டன. ஆனால், பங்குகள் வாங்கக்கூடியவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஏழை இந்தியர்களுக்கென வெ.50 கோடி பங்குகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஒதுக்கியிருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்தான். ஆனால், இது எவ்வாறு அந்த மக்களை சென்றடையப் போகிறது என்பது இன்னமும் நமக்கு தெரியாது. இவை இன்னமும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. மைக்கா ஹோல்டிங்ஸ் மாதிரி பணத்தை வங்கியில் போட்டு விட்டு, பங்குகளை வாங்கி பிறகு திருப்பிச் செலுத்துவது போன்ற முறை கையாளப்படுமா அல்லது வேறு வழி கையாளப்படுமா என்பதும் தெரியவில்லை. பி.என்.பி. நிர்வாக பொறுப்பில் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டால் மட்டுமே பங்குகளும் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும். 1995-ஆம் ஆண்டில், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கீழ் ஜொகூர் மாநில அரசாங்கம் வழங்கிய யூனிட் டிரஸ்ட் பங்குகளை இந்தியர்கள் வாங்கினார்கள். ஆனால், அதன் நிர்வாகப் பொறுப்பில் இந்தியர்கள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பங்குகளை இழக்க நேரிட்டது. அந்த மாதிரி மீண்டும் நடக்கக்கூடாது. நீல பெருந்திட்டம் அமல்படுத்தப்பட்டதும் அது தொடர்பான விளக்க அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அதன் முன்னேற்றம் என்ன என்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுநாள் வரையிலும் தனியார் மயம், நிறுவன மயம் உள்ளிட்ட பெருந்திட்டங்களில் வேலியில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் தரப்பினர்களாக மட்டும் நாம் இருந்து வருகிறோம். இது மிகவும் பரிதாபகரமான ஒரு நிலை. இனியும் நாம் இப்படி இருக்க முடியாது. நமக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால், அனைத்து நிலைகளிலும் நமக்கு உரிய பங்கேற்பினை அவர்கள் வழங்க வேண்டும். இப்போதைக்கு நீல பெருந்திட்டத்தை பிரதமருக்கும் ம.இ.கா.விற்கும் இடையிலான ஒன்றாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், இந்த 50 கோடி வெள்ளி பி.என்.பி. பங்குகளின் அமலாக்கத்தையும் ஒவ்வொரு ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை அதன் தொடர் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு மற்றுமொரு அரசாங்க சுயேச்சை அமைப்பை அரசாங்கம் நியமனம் செய்ய வேண்டும். இதனை ம.இ.கா-வின் சாதனையாக பெருமை அடித்துக் கொள்வதை நிறுத்தி விட்டு காரியத்தில் இறங்க வேண்டும். உண்மையில் நம் இந்தியர்களை பாவம் என்றே சொல்ல வேண்டும். இந்த 50 கோடி வெள்ளி பங்குகள் எவ்வாறு அந்த மக்களை சென்றடையப் போகிறது? இதனை அரசாங்கம் முன்வந்து விளக்க வேண்டும். அவர்கள் முதலில் பணத்தை செலுத்தி விட்டு, ஒவ்வொரு பி40 பிரிவினருக்கும் அதனை ஒதுக்கித் தந்து மாத தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் முறை கடைபிடிக்கப்படுமா? கடன் கொடுக்கப்படுமா? கடன் என்றால் அதன் தொகை எவ்வளவு என பல நிலைகளிலும் ஆராய வேண்டியுள்ளது. அரசாங்கமே பணத்தை முதலில் செலுத்தி மக்கள் வாங்குவதற்கு வகை செய்தால் அதில் நன்மை உண்டு. இல்லையென்றால் பங்குகளை ஏழை மக் களால் வாங்க இயலாது. பணம் உள்ளவர்கள் மட்டுமே இதனால் லாபமடைவார்கள்.அமானா சாஹாம் பங்குகளுக்கு இந்த கதிதான் ஏற்பட்டது. பங் குகளை வாங்க இந்தியர்களிடம் பணம் இல்லை. பணக்காரர்கள் மட்டும்தான் வாங்கினார்கள். ஆகவே, அமலாக்க நிலையில் இதன் கண்காணிப்பு மிகவும் அவசியம் என்று சிவகுமார் வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img