ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

மலாய்காரர் அல்லாதவர்களின் குடியுரிமையை பறிக்கச் சொல்வதா?
வெள்ளி 28 ஏப்ரல் 2017 12:31:56

img

1957க்கும் 1970க்கும் இடையே குடியுரிமை வழங்கப்பட்ட மலாய்க்காரர் அல்லாதவர்களின் நிலையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென கோரியிருக்கும் ஓர் இனவாத அமைப்பை பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேற்று சாடினார். பாரிசான் பெர்திண்டாக் மலாயு இஸ்லாம் (பெர்திண்டாக்) என்ற அந்த அமைப்பின் இந்த இன ரீதியான உணர்ச்சியற்ற எரிச்சலூட்டக்கூடிய செயலைக் கண்டுதான் வெறுப்படைவதாக பிபிபிஎம் நிறுவன உறுப்பினரான அவர் ஓர் அறிக்கையில் கடுமையாக சாடினார். நான் ஒரு மலாய்க்காரர். ஆனால், முதலில் ஒரு மலேசியராக இருக்கவே நான் விரும்புகிறேன் என்று அவர் கூறினார். இந்நாட்டில் ஒரு பொதுவான குடையின் கீழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்துவது மலேசியர் என்ற அடையாளமே என்று அவர் மேலும் கூறினார். பெர்காசா, மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம், யாயாசான் ஜிபிஎம்எஸ், பெம்பலா ஆகியவை உட்பட 22 அமைப்புகள் பெர்திண்டாக்கில் இடம் பெற்றுள்ளன. மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர் மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால், அது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பெர் திண்டாக் பேச்சாளர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அஸிஸ் நேற்றுமுன்தினம் கூறி யிருந்தார். ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர் விசுவாசப் பிரமாணம் எடுக்க வேண்டுமென கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத் தின் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டிருப்பதாக கைருல் செய்தியாளர்களிடம் கூறினார். எனினும், இந்த நடைமுறை 1957க்கும் 1970க்கும் இடையே தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் மலேசிய குடியுரிமைப் பெற சாத்தியமாகி இருக்கிறது என்று அவர் கூறி யிருந்தார். சக மலேசியர்களின் குடியுரிமையை ரத்து செய்யும்படி கோருவதன் வழி இந்த பொறுப்பற்ற அமைப்பினர் நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்வதாக சைட் சாடிக் குறிப்பிட்டார். நாம் பல ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து ஒரே மக்களாக வாழ்ந்து வருகிறோம். நாம் ஒன்றாக உணவு உட்கொண்டிருக்கிறோம். ஒன்றாக பள்ளிக்குச் சென்றிருக் கிறோம், ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். ஒன்றிணைந்து போர்களில் ஈடுபட்டிருக்கிறோம். இருந்தபோதிலும் இந்த நன்றி மறந்த மலேசியர்கள் ஒற்றுமை வரலாற்றை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அவர் கடுமையாக சாடினார். பெர்திண்டாக் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்த நன்றி மறந்த மலேசியர்களுக்கு மலாய்க்காரர் அல்லாத ஆசிரியர்கள் முன்பு பாடம் போதித்து இருப்பர். அவர்களுக்கு மலாய்க்காரர் அல்லாத நண்பர்கள் நிச்சயம் இருந்திருப்பர். அவர்களுக்கு மலாய்க்காரர் அல்லாத மருத்துவர்கள் முன்பு சிகிச்சை அளித்திருப்பர் என்பது நிச்சயம் என்றார் அவர். இருந்தபோதிலும் இந்த மலேசியர்களின் குடியுரிமையைப் பறிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்று சைட் சாடிக் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img