திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

முதன் முறையாக தமிழில் ஸ்ரீ ஹனுமான் சாலீஸா!
வியாழன் 27 ஏப்ரல் 2017 17:32:27

img

இதுவரையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஹிந்தி மொழியில் மட்டும் பிரார்த்தனை செய்யப்பட்டு வந்த ஸ்ரீ ஹனுமான் சாலீஸா, முதன் முறை யாகத் தமிழில் பிரார்த்திக்கப்படும் நிகழ்வு பரம பூஜ்ய டாக்டர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜி தலைமையில் நடைபெற உள்ளது. பெரும் சிறப்புக்குரிய இந்நிகழ்வு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்தில் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரையில் நடைபெற உள்ளது. என்றும் சிரஞ்சீவியாக வாழும் பெரும் பேறுபெற்ற ஹனுமான் திருவடிகளைப் பணிந்து துளசிதாசர் ஸ்ரீ ஹனுமான் சாலீஸாவைக் கூட்டாக இணைந்து பிரார்த்தனை செய்வதன் வழி நல் அதிர்வலைகளையும் உணர்வுகளையும் ஏற்படுத் தலாம். எனவே, உலக அமைதி யைப் பொருட்டு இந்தியா தொடங்கி அமெரிக்கா, தென் ஆப்பிரி க்கா, ஜப்பான், சீனா, ஆஸ்தி ரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் ஸ்ரீ ஹனுமான் சாலீஸா கூட்டுப் பிரார்த்தனை நடத்தப் பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக நேற்று இங்குள்ள மலேசிய ஞான போத சபா மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் நடைபெற்ற ஸ்ரீ ஹனு மான் சாலீஸாவில் ஏறக்குறைய 2,30,000 பேர் எவ்வித வேறுபாடுகளின்றி கலந்துகொண்டதும் அமெரிக்காவில் சிறு இடைவெளியின்றி 24 மணிநேரம் இந்நிகழ்வை நடத்தியதும் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பல சிறப்புகளும் நன்மைகளும் உடைய இந்நிகழ்வு முதல்முறையாக, தமிழில் பத்துமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலியுகம் என்பதால் தற்போது மக்களிடையே குழப்பம், அதிருப்தி, கவலை போன்ற எதிர்மறை விஷயங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லோரும் ஏதோ ஒருவித பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் தீர்வாகவும் மக்களிடையே பிரபஞ்ச சக்தியைப் பரப்பவும் நடத்தப்படும் இந்நிகழ்வில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சுவாமிஜி கேட்டுக்கொண்டார். நுழைவு இலவசம் என்பதால் பக்தர்கள் திரளாக வந்து இந் நிகழ்வில் கலந்து ஸ்ரீ ஹனுமான் அருளைப் பெற்றுய்யலாம். இது குறித்த மேல் விவரங் களுக்கு ஞான போத சபாவின் துணைத்தலைவர் வடிவேலுவை 012-2669504 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முதல் முறையாக தலைமை நீதிபதியாக ஒரு பெண்

ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம்

மேலும்
img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img