வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

பள்ளி மாணவர்களிடையே குண்டர்தனம் சாபமா? திணிப்பா?
செவ்வாய் 25 ஏப்ரல் 2017 16:15:54

img

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிலைப் பள்ளிகளில் இந்திய மாணவர்களிடம் தடயமே இல்லாமல் இருந்த குண்டரிய நடவடிக்கைகள் தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு நிச்சயமாக சாமி கொடுத்த வரமாக இருக்காது. 20 ஆண்டுகள் இடைவெளியில் இடைநிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான மாற்றங்களே இந்திய மாணவர்களின் தடுமாற்றத்திற்கும் குண்டரிய நடவடிக்கைகளுக்கும் அஸ்திவாரம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஆஸ்திரேலியாவின், நியூ இங்கிலாந்து பல்கலைக் கழகத்தின் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் அமர்ஜிட் கவுர் மலேசிய இந்தியர்களின் ஏழ்மையைப் பற்றி குறிப்பிடுகையில் Social problems should not be viewed as an isolated problems - It goes parallel with economy" (Amarjit Kaur, Professor of Economics, History, University of New England, Australia) நமது சமூகத்தில் நிலவிவரும் சமூக இன்னல்களைச் சிறிய பிரச்சினையாகக் கருதாமல் பொருளாதார நெருக்கடிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளதை மஇகாவோ அல்லது அரசாங்கமோ அறவே செவிசாய்க்கவில்லை என்பதே தெள்ளத் தெளிவான உண்மையாகும். பிஃரி மலேசியா டுடே (FMT) அகப்பக்கத்தின் வழி 4.5.2015இல் வெளியிடப்பட்ட Women Gengsters add to crime statistics" எனும் தலைப்பிலான கட்டுரையின் வழி ஒன்றுபட்ட குற்றச்செயல் தடுப்பு வாரியத்தின் தலைவர் அ.பால கிருஷ்ணன் நமது நாட்டில் இந்தியர்களிடையே காணப்படும் குற்றச் செயல்களில் 12 விழுக்காட்டினர் இந்தியப் பெண்கள் என்பதாகவும் 10 விழுக்காட்டு குற்றச் செயல்களுக்குப் பொறுப்பாளர்களாகவும் இருப்பதாகக் கூறியுள்ள தகவல் இடைநிலைப்பள்ளிகளில் குண்டரிய நடவடிக்கைகளுக்கு மாணவிகளும் விதிவிலக்கல்ல என்பதை ஏவுகணையால் உணர முடிகின்றது. சமயவாதம் மேலோங்குகின்றதா? கிள்ளான் வட்டாரத்தில் உள்ள ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப் பள்ளி, ஷா பண்டார் இடை நிலைப்பள்ளி, கம்போங் ஜாவா இடைநிலைப்பள்ளி, ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளிகளைத் தவிர மேலும் பல நாடு தழுவிய இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களிடையே காணப்படுவதை மலேசிய கல்வியமைச்சும், மலேசிய காவல் படையினரும் முழுமையாக ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏவுகணை முன் மொழிகின்றது. மேலும் குண்டரிய நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரமான செயல்பாடுகள் ‘கொக்கோ கோலா’ போத்தலைத் திறந்த வுடன் மேலெழும்பும் நுரைகளாகவும் அமைந்துவிடக் கூடாது என ஏவுகணை எதிர் பார்க்கின்றது. மலேசிய இந்தியர்களிடையே குறிப்பாக இந்திய இளைஞர் களிடையே அதிகரித்து வரும் (தற்போது இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களையும் பதம் பார்த்துள்ளது) சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் இன ரீதியிலான கண்ணோட்டமும் செயல்பாடு களுமே காரணம் என்பதை கேப்ரியல் ஜெபநாதன் எனும் பாதிரியார் அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் ஆய்வு அறிக்கையில் பின்வரும் கருத்தினை முன் வைத்துள்ளார். * மலாய்க்காரர் ஒருவரின் பிரச்சினை தேசியப் பிரச்சினையாகும். * சீனர் ஒருவரின் பிரச்சினை இனப்பிரச்சினையாகும்! * இந்தியர் ஒருவரின் பிரச்சினை பிரச்சினையே அல்ல. என்பதாகவே அரசாங்கத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளதா? இந்த அடிப்படையில்தான் இடை நிலைப்பள்ளிகளிலும் இந்திய மாணவர்களின் மீதும் அனுசரிக்கப்படுகின்றதா என்பதை ஏவுகணை அறிய வேண்டுவது அவசியமாகவே அமைகின்றது. ஏவுகணை இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களின் குண்டரிய நடவடிக்கைகளின் தொடர்பில் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றத்தின் வழி இப்போது இடைநிலைப்பள்ளிகளில் வெளிப்படையாகவே காணப்படும் இனவாதப் போக்கோடு பெரும்பான்மைச் சமயத்தின் சமயவாத நடவடிக்கைகளுமே பிரதான மான காரணம் என்பதை மலேசியக் கல்வி யமைச்சு தவறு என நிரூபிக்க முடியுமா என ஏவுகணை சவால் விடுகின்றது. இடைநிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் இந்திய ஆசிரியர்களில் பெரும்பாலோர் இன உணர்வு அற்றவர்களாகவே பள்ளி நிர்வாகத்திடம் காட்டிக் கொள்வது மற்றொரு காரணமாகவே ஏவுகணை கருதுகின்றது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிலைப்பள்ளிகளில் அறவே காணப்படாத சமயவாத நடவடிக்கைகள் இந்திய மாணவர்களை ஓரங்கட்டும் செயலுக்கு வித்திட்டுள்ளதை மறுக்க முடியுமா? இடைநிலைப்பள்ளிகளில் சமய அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னுரிமை வழங்கப்படுவது உண்மையா? ஏற்கெனவே இனவாத நடவடிக்கைகளால் இடைநிலைப்பள்ளிகளின் இந்திய மாணவர்கள்; * விளையாட்டுத் துறை நடவடிக்கைகள் * ஓட்டப்பந்தயம் தொடர்பான நடவடிக்கைகள் * பள்ளியின் தலைமை மாணவர்களுக்கான எண்ணிக்கை * பள்ளியின் மிகச் சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் போன்றவற்றில் ஓரங்கட்டப்பட்டுள்ளதை யாராவது மறுத்துக் கூற முடியுமா? இந்தியப் பெற்றோர்களின் மனக்குமுறல்கள் எதையுமே வெளியிட முடியாமல் அடங்கிப் போயிருக்கும் சம்பவங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதே ஏவுகணையின் வாதமாகும். சமயவாத நடவடிக்கைகள் கல்வியமைச்சின் கொள்கையா? நாட்டில் உள்ள பெரும்பாலான இடைநிலைப்பள்ளிகளில் சமயம் தொடர்பான நடவடிக்கைகள் பேரளவில் அதிகரித்து வருவதை கல்வியமைச்சின் தேசியக் கொள்கையா என்ற கேள்வியோடு சமயம் தொடர்பான நடவடிக்கைகள் இடைநிலைப்பள்ளிகளில் இன வாதத்தினை மாணவர்களி டையேயும் ஆசிரியர்களிடை யேயும் ஏற்படுத்தியுள்ளதை யாராவது மறுக்க முடியுமா? ஏற்கெனவே வீடுகளில் சமூகப் பொருளாதார சூழலினால் ஊனப்பட்டிருக்கும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதம் மற்றும் சமயவாத நடவடிக்கைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு வருவதற்குச் சான்றாகவே கிள்ளானில் சமீபத்தில் நடைபெற்ற ‘கேக் வெட்டும்’ குண்டரிய வைபவம் நடைபெற்றுள்ளதாக ஏவுகணை கருதுகின்றது. .... untuk mewujudkan insan yang seimbang dan harmonic dari segi intelek, rohani, emosi dan jasmani berdasarkan kepada kepercayaan kepada tuhan" (இறை நம்பிக்கை கோட்பாட்டிற்கு உட்பட்டு சரிசமமான மகிழ்வான மாணவர்களை அறிவு, இறையுணர்வு, உணர்வு மற்றும் உடல் ஆரோக்கியம் ரீதி யில் மாணவர்களை உருவாக்குதல்) எனும் தேசியக் கல்விக் கொள்கையில் (Falsafah Pendidikan Negara - FPN) பெரும்பான்மை இனத்தின் சமயத்திற்கு மட்டும் இடைநிலைப்பள்ளிகளில் முக்கியத்துவம் வழங்கும் நடைமுறை அரசாங்கத்தின் கொள்கையாக அமல்படுத்தப்படுகின்றதா என்ற கேள்விக்கு விடை தேடுகின்றது ஏவுகணை. சமயவாத கொள்கைகளின் வழி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது பிற இன மாணவர்களுக்கு சரியான நடவடிக்கைகள் ஏற்படுத்தப் பட் டுள்ளதா? சில இடை நிலைப்பள்ளிகளில் பெரும் பான்மை சமயத்திற்கு அப்பாற்பட்டு மற்ற சமய நடவடிக்கைகளோ அல்லது நிகழ்வுகளுக்கோ அறவே அனுமதி இல்லை என்பதையும் மறுக்க முடியுமா? சமயக் கல்வியின் வழி அல்லது நன்னெறிக் கல்வியின் வழி இனரீதியிலான அணுகுமுறை இடைநிலைப்பள்ளிகளில் தடுமாறி நிற்கும் இந்திய மாணவர்களுக்கு வெளிச்சத்தினைக் காட்டாதா என்ற கேள்வியை ஏவுகணை முன் வைக்கின்றது. இடைநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் முதற் கொண்டு தலைமையாசிரியர், துணைத்தலைமையாசிரியர், மாணவர் நல பொறுப்பாளர், புறப்பாட பொறுப்பாளர் போன்ற பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளும் இனரீதியிலும் சமய அடிப்படையிலும் வழங்கப்படுவதை மலேசிய கல்வி யமைச்சு மறுக்க முடியுமா? பெரும்பாலான இந்திய மாண வர்கள் படிக்கும் இடைநிலைப் பள்ளிகளிலும், நிர்வாகப் பொறுப்பிற்கு இந்திய ஆசிரியர்களை நியமனம் செய்வது மாவட்ட கல்வி இலாகாவிற்கும் மலேசிய கல்வியமைச்சுக்கும் மனமே இல்லையா?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img