திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

தினமும் உயிரைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்கிறோம்!
செவ்வாய் 25 ஏப்ரல் 2017 12:59:16

img

தெலுக் பங்லீமா காராங்,:வேலைக்குச் செல்வது உட்பட வீட்டை விட்டு எங்கு சென்றாலும் குடியிருப்புப் பகுதிக்கு எதிரில் உள்ள பிரதான நான்கு வழி சாலையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. விநாடிக்கு விநாடி ஒரு வாகனம் செல்லும் இச்சாலையை ஒவ்வொரு தடவையும் கடக்கும் போதெல் லாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்பதைப்போல் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்ப்பலி சம்பவங்கள் நிகழ்ந்துவிடக்கூடிய இச்சாலையை கடந்து எங்கள் அரு கிலுள்ள தாமான் பெர்தீவி குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இப்பகுதி மக்களின் உயிரைக் கருதி மத்திய, மாநில அரசாங்கங்கள் இங்கு சாலையை கடப்பதற்கான மேம்பால வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டு மெனக்கோரி நேற்று காலை குடியிருப்புப் பகுதிக்கு எதிரில் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த தாமான் பெர்தீவி குடியிருப்புப் பகுதியின் தலைவர் மதுரைவீரன், இக்குடியிருப்புப் பகுதி மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்துவரும் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இச்சாலையை கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக பந்திங்கிலிருந்து கிள்ளான் செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ள தாமான் பெர்தீவி குடியிருப்புக்கு கிள்ளானிலிருந்து தங்களின் சொந்த வாகனங்களில் செல்வோர் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள யூ வளைவை பயன்படுத்தி திரும்புகின்ற அதேவேளை பொதுப் பேருந்துகளின் சேவையை பயன்படுத்திவரும் பலரும் குடியிருப்புப் பகுதிக்கு எதிரே இறங்கிவிட வேண்டிய சூழ்நிலையில் தடுப்புகளைக் கொண்டுள்ள பேராபத்து மிகுந்த இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர் எனக் கூறினார். அதிலும் வயது முதிர்ந்தவர்கள் தெலுக் பங்லீமா காராங் நகரில் உள்ள அரசாங்க கிளினிக்குக்குச் சென்று விட்டு பேருந்துகளில் வந்து இக்குடி யிருப்புக்கு எதிரில் இறங்கி சாலையை கடப்பதற்கு பல மணிநேரம் காத்திருக் கின்றனர் என்பதைவிட ஆபத்தான இச்சாலையை கடக்கும் வேளையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் மேலோங்குவதாக தெரிவித்தார். பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்களும் இச்சாலையை கடப்பதை வழக்கமாக கொண்டிருப் பதாக மதுரைவீரன் விளக்கமளித்தார். தேர்தல் காலங்களின் போது எங்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறுவதும் அரிசி,பருப்புகளைக் கொண்ட பொட்டலங்களை வழங்கும் வித்தைகளை எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது இத்தொகு தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையாளுவதை நிறுத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் நாங்கள் எதிர்கொண்டுவரும் இப்பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். வாக்குக்கேட்டு எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எங்களின் இந்தக் கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைவுறுத்துவதாக தெரிவித்தார். குடியிருப்புப் பகுதியில் நிழல்குடை இல்லை: தாமான் பெர்தீவி குடியிருப்புக்குச் செல்லும் சாலையை கடக்கும் பிரச்சினை மட்டுமல்லாது பொதுப் பேருந்துகளுக்காக காத்திருக்கும் மக்களுக்கு நிழல்குடை (பஸ் கொட்டகை) இல்லாததால் இச்சாலையை கடப்பதற்கு இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை சாலையோரத்தில் காத்திருக்கும் வேளையில் மழை பெய்தால் அதில் நனைய வேண்டியிருக்கிறது. வெய்யிலின்போது துவண்டு விடுவதாக இப்பகுதியைச் சேர்ந்த தங்கம்மா, மா.அமுதா, சரஸ்வதி,மணிமேகலை ஆகியோர் வேதனை தெரிவித்தனர். குடியிருப்பு (தாமான்) பகுதிகளில் சாலையின் இரு பக்கத்திலும் நிழல்குடை இருப்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும் என்றாலும் இங்கு அவ்வாறான வசதிகள் எதுவும் இல்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்ததுடன் கோல லங்காட் மாவட்ட மன்றம் இப்பிரச்சினைக்கு தகுந்த தீர்வுகாண வேண் டும் என வலியுறுத்தினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img