செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

உணவுப் பொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கமே காரணம்.
செவ்வாய் 25 ஏப்ரல் 2017 12:50:26

img

நாட்டில் உணவகங்கள் உட்பட உணவுப்பொருட்கள் விலையேற்றத்திற்கு மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளே காரணமாகும். இதனை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர் விளங்கிக் கொள்ளாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நேற்று கேள்வி எழுப்பினார். மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் அளவிற்கு மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் உணவகங்களில் பொருட் களின் விலையேற்றத்திற்கு எதிர்க்கட்சிகளைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் என்று உணவக உரிமையாளர்களை சாடுவது எந்த வகையிலும் நியாய மில்லை என்று ஜ.செ.க. சிலாங்கூர் மாநில அமைப்புச் செயலாளர் இங் தீன் சீ தெரிவித்தார். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் நாட்டில் செயல்பட்டு வரும் உணவக உரிமையாளர்களின் பட்டியலை தெங்கு அட்னான் தெங்கு மன்சோரால் ஒப்பீடு செய்ய முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு பின்னணியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அண் மையில் தெங்கு அட்னான் குற்றஞ்சாட்டியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் இங் தீன் சீ இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக் கிழமை ஷா ஆலமில் கிம்மா மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த தெங்கு அட்னான், இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சட்ட விரோதமாக தே தாரேக் மற்றும் ரொட்டி சானாய் விலையை உயர்த்துவதாக கடுமையாக சாடினார். சீனிக்கு உதவித் தொகையாக கிலோவிற்கு 34 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மாமாக் உணவக உரிமையாளர்கள் இன்னமும் தே தாரேக்கிற்கு ஒரு கிளாசுக்கு 50 காசு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். உண்மையிலே ஒரு கிளாஸ் தே தாரேக்கிற்கு ஒரு கிலோ சீனியா கலக்கிறீர்கள்..? என்று இந்திய உணவக உரிமையாளர்களை அமைச்சர் சாடியிருந்தார். இதற்கு இந்திய முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதுடன் அமைச்சரின் பேச்சை அவர்கள் கடுமையாக சாடினர். இந்நிலையில் இது குறித்து பேசிய அந்த ஜ.செ.க. தலைவரும் சிலாங்கூர் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினருமான இங் தீன் சீ,விலைகள் குறைவதற்கு ஐந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக் கத் தவறி விட்டதுபோல் தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் பொருளாதாரம் மோசமடைவதற்கான உண்மையான காரணத் தைக் கூற மறுக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது என்றார். அரசாங்கம் உண்மையிலேயே இந்நிலைக்குத் தீர்வுகாண விரும்பினால் இந்த ஐந்து விவகாரங்கள்மீது அது கவனம் செலுத்த வேண்டும். இந்த ஐந்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தினால் பொருள் விலைகளும் மலேசிய பொருளாதாரமும் சீரடையும் என்று நம்புகி றேன் என்று இங் தீன் சீ ஓர் அறிக்கையில் கூறினார். ஜிஎஸ்டி.யை ஒழித்தல், 1எம்டிபி மோசடிக்குத் தீர்வுகண்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், ஊழலை ஒழித்தல், ரிங்கிட்டின் மதிப்பை மீட்டெடுத்தல், பெட்ரோல் விலையைக் குறைத்தல் போன்ற கோரிக்கைகளை அவர் பரிந்துரைத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img